கேரட் பட்டாணி ரைஸ். (Carrot pattani rice recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கேரட் , பட்டாணி சேர்த்து இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். அவசர நேரத்தில் செய்யகூடிய , ஈஸியான உணவு. #kids3#lunchbox recipe

கேரட் பட்டாணி ரைஸ். (Carrot pattani rice recipe in tamil)

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கேரட் , பட்டாணி சேர்த்து இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். அவசர நேரத்தில் செய்யகூடிய , ஈஸியான உணவு. #kids3#lunchbox recipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25நிமிடம்
4நபர்
  1. 1கப் துருவிய கேரட்
  2. 1/2 கப் வேகவைத்த பச்சை பட்டாணி
  3. 1வெங்காயம் நறுக்கியது
  4. 2பச்சை மிளகாய் நறுக்கியது
  5. 1டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு
  6. 1டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  7. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  8. உப்பு

சமையல் குறிப்புகள்

25நிமிடம்
  1. 1

    கேரட்டை நன்கு துருவி கொள்ளவும். பச்சை பட்டாணியை வேக வைத்து எடுத்துக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு,பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். பச்சை பட்டாணி, வறுத்த வேர்க்கடலை சேர்த்து வதக்கவும். பின் வடித்த சாதத்தை சேர்த்து, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

  4. 4

    சுவையான கேரட் பட்டாணி சாதம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes