ஐயர் வீட்டு தவல வடை (Thavala vadai recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

ஐயர் வீட்டு தவல வடை (Thavala vadai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25நிமிடம்
5பேர்
  1. 1கப் இட்லி அரிசி
  2. 1/2கப் துவரம்பருப்பு
  3. 1/2கப் கடலைப்பருப்பு
  4. 1/2கப் உளுத்தம்பருப்பு
  5. 1/2கப் பாசிப்பருப்பு
  6. 5டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  7. 1கைப்பிடி கறிவேப்பிலை
  8. 1கைப்பிடி கொத்தமல்லி இலை
  9. 5 காய்ந்த மிளகாய்
  10. 2பச்சை மிளகாய்
  11. 1/2துண்டு இஞ்சி
  12. 1டீஸ்பூன் நெய்
  13. 1டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  14. உப்பு
  15. எண்ணெய் பொரிக்க

சமையல் குறிப்புகள்

25நிமிடம்
  1. 1

    அரிசியை தனியாக 2மணிநேரம் ஊற வைக்கவும். பருப்பை தனியாக 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    பருப்புகளை தண்ணீர் சேர்க்காமல் மைய அரைத்து கொள்ளவும். அரிசியையும் காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக(ரவை பதத்திற்கு) அரைக்கவும். இரண்டையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்க்கவும்.

  3. 3

    மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், நெய் மற்றும் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அரைத்து கலந்து கொள்ளவும்.

  4. 4

    நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து பின் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  5. 5

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். இதனிடையே வடை மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, பிளாஸ்டிக் பேப்பரில் வடையாக தட்டி, எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  6. 6

    தேங்காய் துருவல் இல்லாமலும் இதை வடையாக போட்டு எடுக்கலாம். சுவையான சத்தான தவல வடை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes