Elachi tea☕ (Elachi tea recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

Elachi tea☕ (Elachi tea recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
1 நபர்
  1. 1 தம்ளர் ஆவின் பால்
  2. 1.25 ஸ்பூன் 3 ரோஸ் or சக்ரா டீ தூள்
  3. 2 ஸ்பூன் சர்க்கரை
  4. 3 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    பாலை காய வைத்து கொள்ளவும். 1.25 ஸ்பூன் நல்ல தரமான டீத்தூள் எடுத்துக் கொள்ளவும். இரண்டு ஸ்பூன் சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். சர்க்கரை அவரவர் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம். மூன்று ஏலக்காய் நன்றாக தட்டி நுணுகி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    காய்ந்த பாலை ஒரு டம்ளர் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். அதில் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். மீண்டும் பாலை அடுப்பில் வைத்து, அதில் டீ தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். டீ பொங்கி வரும்போது ஒரு கரண்டி கொண்டு டீயை நன்கு கலந்து விடவும். டீ மணமும், கலரும் வரும் வரை கரண்டியால் கலந்து விட்டுக் கொண்டே இருக்கவும். இரண்டு நிமிடம் வரை வைத்திருக்கலாம்.

  3. 3

    பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு டீயை வடிகட்டி கொண்டு நன்கு வடித்து கொள்ளவும். தங்களுக்கு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஸ்பூன் கொண்டோ அல்லது வேறு டம்ளர் கொண்டு நன்கு கலந்து கொள்ளவும். மாலை நேரத்தில் சூடான சுவையான டீ தயார். பிஸ்கட்ஸ் அல்லது அல்லது ரஸ்க் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். ஈவினிங் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் செய்து அதனுடன் டீ எடுத்துக்கொண்டால் சூப்பராக இருக்கும்

  4. 4

    சுவையான ஏலக்காய் டீ ரெடி. all cook pad friends are welcome to have with me🙏💐❤️😄☕

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes