வால்நட் பன்னீர் கறி (Walnut paneer curry recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

வால்நட் பன்னீர் கறி (Walnut paneer curry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4பேர்
  1. மாசலா அரைக்க:
  2. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  3. 2டீஸ்பூன் நெய்
  4. 2 பட்டை
  5. 3லவங்கம்
  6. 1டீஸ்பூன் சோம்பு
  7. 1டீஸ்பூன் சீரகம்
  8. 3வெங்காயம் நறுக்கியது
  9. 4 பல் பூண்டு
  10. 1/2துண்டு இஞ்சி
  11. 4 பச்சை மிளகாய்
  12. 1/2கப் வால்நட்
  13. 2டேபிள்ஸ்பூன் தண்ணீர்
  14. கறி செய்ய:
  15. 400கிராம் பன்னீர்
  16. 1/2 வெங்காயம்
  17. 1குடமிளகாய்
  18. 30கிராம் பட்டர்
  19. 1/2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  20. ஏற்கனவே அரைத்த மசாலா விழுது
  21. 4தக்காளி விழுது
  22. 1டீஸ்பூன் உப்பு
  23. 2டீஸ்பூன் கஷ்மீரி மிளகாய் தூள்
  24. 1டீஸ்பூன் மல்லி தூள்
  25. 1டீஸ்பூன் சீரகத்தூள்
  26. 1டீஸ்பூன் கரம்மசாலா தூள்
  27. 2கப் தண்ணீர்
  28. 1டேபிள்ஸ்பூன் கஸ்தூரி மேதி
  29. 1கைப்பிடி கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, நெய் சேர்த்து பட்டை, லவங்கம், சோம்பு, சீரகம் சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின்னர் வால்நட் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், ஆறவிட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

  3. 3

    வெங்காயம், குடமிளகாய் இரண்டையும் பெரிய துண்டுகளாக நறுக்கவும். இதை தனி தனியாக எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

  4. 4

    தக்காளி விழுதாக அரைத்து கொள்ளவும். பன்னீரை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

  5. 5

    தோசை கல்லில் சிறிது நெய் விட்டு பன்னீரை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

  6. 6

    ஒரு வாணலியில் பட்டர் சேர்த்து, ஏற்கனவே அரைத்த மசாலா பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி விழுதையும் சேர்த்து வதக்கவும்.

  7. 7

    பச்சை வாசனை போக வதக்கவும். மிளகாய் தூள், மல்லித்தூள், கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

  8. 8

    எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு, வதக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து கிளறவும்.

  9. 9

    பின்னர் வறுத்த பன்னீரை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

  10. 10

    நன்கு சுண்டியவுடன், கஸ்தூரி மேதி சேர்த்து கலந்து விட்டு, சிறிது கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

  11. 11

    சுவையான சத்தான வால்நட் பன்னீர் கறி ரெடி. இதை சப்பாத்தி, நானுடன் சேர்த்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes