கடாய் பன்னீர் (Kadaai paneer recipe in tamil)

Iyarkai Unavu
Iyarkai Unavu @cook_26210643

கடாய் பன்னீர் (Kadaai paneer recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 1 கப் பன்னீர் -(துண்டுகளாக்கப்பட்டது)
  2. 1 கப் குடைமிளகாய் - (நறுக்கியது)
  3. வெங்காயம் - 2
  4. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
  5. 1 டீஸ்பூன்மிளகாய் தூள்
  6. ஏலக்காய் - 4
  7. க்ராம்பு - 4
  8. 1 டீஸ்பூன்பெருஞ்சீரகம்
  9. வர மிளகாய் - 2
  10. 2 டேபிள் ஸ்பூன்தனியா
  11. 1 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  12. கஸ்தூரி மெதி
  13. பச்சை பட்டாணி - ஒரு கைப்பிடி

சமையல் குறிப்புகள்

  1. 1

    தனியா, சோம்பு, ஏலக்காய், க்ராம்பு மற்றும் வரமிளகாயை லேசாக வறுத்து, பின் அவற்றை மிக்ஸியில் போட்டு,கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    பின் அதே வாணலியில் எண்ணெயை ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். பின்னர் கெட்டியாக அரைத்து கொள்ளவும்

  3. 3

    1/2 வெங்காயம் மற்றும் குடைமிளகாயை பெரிய துண்டுகளாக நறுக்கி தனியாக 2 நிமிடம் வதக்கவும். பின் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.

  4. 4

    அரைத்து வைத்த வெங்காயம் தக்காளி விழுதை இதனுடன் சேர்த்து 3நிமிடம் நன்கு வதக்கவும். பின்னர் பொடி செய்து வைத்த மசாலாவை சேர்ந்து 2 நிமிடம் கொதிக்க விடவும்

  5. 5

    இப்போது நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து கலந்து விடவும். 2நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைத்து சமைக்கவும்.

  6. 6

    அடுப்பை அணைத்து விட்டு சிறிது கஸ்தூரி மெதி சேர்த்து நன்றாக கலந்து விடவும். சுவையான கடாய் பன்னீர் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Iyarkai Unavu
Iyarkai Unavu @cook_26210643
அன்று

Similar Recipes