ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#noodles ஃப்ரைட் ரைஸ் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் ரோட்டு கடை பகுதியில் செய்யும் பிரைட் ரைஸ் இன்னும் அதிக சுவையுடன் இருக்கும். நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கப்பாஸ்மதி அரிசி
  2. 1கேரட்(சிறியது)
  3. 10பீன்ஸ்
  4. 2பெரிய வெங்காயம்
  5. 2பச்சை மிளகாய்
  6. 2முட்டை
  7. 1\2 டேபிள்ஸ்பூன்மிளகாய்த்தூள்
  8. -1\4ஸ்பூன்கரம் மசாலா
  9. 1டேபிள் ஸ்பூன்மிளகுத்தூள்
  10. உப்பு-தேவையான அளவு
  11. எண்ணெய்-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். 2 கப் தண்ணீரை உலை காய்ந்ததும் அரிசியை சேர்த்து முக்கால் பதமாக அதாவது உதிரி உதிரியாக வேக வைக்கவும்

  2. 2

    இதனை சல்லடையில் வடிகட்டி சாதத்தை சிறிது ஆற விடவும்

  3. 3

    ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு பொடியாக அறிந்த பூண்டுப் பல், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி பிறகு நைசாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் வைத்து சிறிது வதக்கி விடவும்

  4. 4

    பிறகு ஸ்லைசாக நறுக்கிய பீன்ஸ் கேரட் சேர்த்து அடுப்பை அதிக தணலில் வைத்து ஒரு நிமிடம் வரை கிளறிக் கிளறி விடவும். (காயை அரை பதம் வரை மட்டுமே கிளறி விடவும். முழுவதுமாக வேக வைக்க கூடாது). இப்போது 2 முட்டையை உடைத்து நடுவில் ஊற்றவும், சுற்றிலும் காயை வைக்கவும்.

  5. 5

    அடுப்பை குறைந்த தணலில் வைத்து முட்டையை இடைவெளி விட்டு விட்டு சிறிது சிறிதாக கிளறி கிளறி வேகவிடவும்

  6. 6

    பிறகு வடித்து உதிரி சாதத்தை சேர்த்து ஒரு சேர கிளறி மிளகாய்தூள், கரம் மசாலாதூள் சேர்க்கவும்

  7. 7

    பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு சேர கிளறி இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் கிளறி அடுப்பை அணைக்கவும்

  8. 8

    சுவையான ரோட்டு கடை முட்டை ஃப்ரைட் ரைஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes