முட்டைக்கோஸ் கோப்தா/cabbage (Muttaikosh kofta recipe in tamil)

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#GA4 #week 20 முட்டைக்கோஸை பொரியல் மாறி கூடுத்தா குழந்தைகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள் அவங்களுக்கு ஃபால் மாறி செய்து கூடுத்தால் முட்டைக்கோஸ் உள்ள நீர் சத்துக்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 1\2முட்டைக்கோஸ்
  2. 5பெரிய வெங்காயம்
  3. 4தக்காளி
  4. 2, பச்சை மிளகாயை
  5. இஞ்சி பூண்டு விழுது
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. 2 டீஸ்பூன்கரமசாலா
  8. 2 டேபூள் ஸ்பூன்வரமிளகாய் தூள்
  9. 2 டேபூள் ஸ்பூன்மல்லி தூள்
  10. தேவையான அளவுஉப்பு
  11. 1பட்டை, கிராம்பு 2, ஏலக்காய் 2
  12. 1கப்,மைதா மாவு
  13. 1\2 கப்கோதுமை மாவு
  14. 3 டேபூள் ஸ்பூன்சோழ மாவு
  15. தேவையான அளவுதண்ணீர்
  16. தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முட்டைக்கோஸ் பெரிய வெங்காயத்தை 2, பச்சை மிளகாயை 2,பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    நறுக்கிய முட்டைக்கோஸ் வெங்காயமத்தை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் இஞ்சி பூண்டு விழுது,கோதுமை மாவு,மைதா மாவு,சோழ மாவு மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், கரமசாலா, மல்லி தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும் அதை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

  3. 3

    அந்த உருண்டை எண்ணெய் போட்டு நன்கு பொரித்து எடுக்கவும்.

  4. 4

    ஒரு வானலியில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் பெரிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் அதில் இஞ்சி பூண்டு விழுது வரமிளகாய் தூள்,கரமசாலா, மல்லி தூள், உப்பு நன்கு வதக்கி கொள்ளவும்

  5. 5

    பிறகு அதை மிக்சியில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

  6. 6

    ஒரு வானலியில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை தேங்காய் பால் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி விடவும்.பிறகு அதில் பொரித்த உருண்டை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

  7. 7

    ருசியான முட்டைக்கோஸ் கோப்தா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
அன்று

Similar Recipes