சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fathis_1993
அமேரிக்கா

சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 சுரைக்காய்
  2. 50 கிராம் பாசிப்பருப்பு
  3. 1வெங்காயம் நறுக்கியது
  4. 1/4 தேக்கரண்டியளவு மஞ்சள் தூள்
  5. தேங்காய் அரைக்க
  6. 3 மேஜைக்கரண்டி தேங்காய் பூ
  7. 1/4 தேக்கரண்டியளவு சோம்பு
  8. 1 பச்சை மிளகாய்
  9. தாளிக்க
  10. 1/2 தேக்கரண்டியளவு கடுகு
  11. 1/2 தேக்கரண்டியளவு உளுத்தம்பருப்பு
  12. 2காய்ந்த மிளகாய்
  13. வெங்காயம்
  14. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    இன்ஸ்டன்ட் பாட் ஐ பிரஸார் மோடில் வைத்து கழுவிய பாசிப்பருப்பு சேர்த்து 5 நிமிடம் பிரஸார் குக் பண்ண வேண்டும்.

  2. 2

    பிரஸார் முழுவதும் போனதும் மீண்டும் திறந்து நறுக்கிய சிறிது வெங்காயம், நறுக்கிய சுரைக்காய் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து மூடி பிரஸார் மோடு கிளிக் 5 நிமிடம் வைத்து வேகவிடவும்.

  3. 3

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை லேசாக கூரகூரப்பில் அரைத்து கொள்ளவும்.

  4. 4

    இன்ஸ்டன்ட் பாடில் பிரஸார் போனதும் திறந்து அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து saute மோடில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.

  5. 5

    பின் அதனை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.

  6. 6

    இன்ஸ்டன்ட் பாடில் saute மோட்‌ கிளிக் செய்து 2 தேக்கரண்டியளவு நெய் சேர்த்து சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் வெங்காயம் நறுக்கியது கருவேப்பிலை சேர்த்து வதக்கி வெங்காயம் லேசாக சிவந்ததும் சுரைக்காய் கூட்டு சேர்ந்து 1 கொதி வர விடவும். சுரைக்காய் பருப்பு கூட்டு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fathis_1993
அன்று
அமேரிக்கா

Similar Recipes