மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#ve காளான் மசாலா

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கப் சிப்பிக்காளான்
  2. ஒரு கப் முட்டை கோஸ்
  3. 2பெரிய வெங்காயம்
  4. ஒரு குழிக்கரண்டி மைதா மாவு
  5. ஒன்றரை குழிக்கரண்டி சோள மாவு
  6. 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள்
  8. அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 2 டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  10. உப்பு தேவையான அளவு
  11. ஒரு மூடி சோயா சாஸ்
  12. இரண்டு மூடி டொமேடோ சாஸ்
  13. கொத்தமல்லித்தழை சிறிதளவு
  14. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    காளான் முட்டைகோஸ் வெங்காயம் இவற்றை சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    நறுக்கிய காய்கறிகள் ஒன்றாகச் சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு மஞ்சள்தூள் மைதா மாவு கார்ன் ஃப்ளார் மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  3. 3

    பிசைந்த மாவை சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

  4. 4

    பொரித்தெடுத்த வடைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்

  5. 5

    மற்றொரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு கான்பிளவர் மாவு தண்ணீரில் கரைத்து கரைசலை அதனுடன் சேர்க்கவும்.

  6. 6

    டொமேட்டோ சாஸ் சோயா சாஸ் இவற்றைச் சேர்த்து ஒரு கொதி விடவும்

  7. 7

    உதித்த வடைகளை சேர்த்து இதனுடன் நன்கு கலக்கவும். இப்போது தயாராக உள்ளது காளான் மஞ்சூரியன்

  8. 8

    காளான் மஞ்சூரியன் மேலே நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரித்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes