செட்டிநாடு கொறடா சட்னி (Chettinadu korada chutney recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#chutney

செட்டிநாட்டின் பாரம்பரியமான வெள்ளைப் பணியாரத்துடன் சாப்பிடக்கூடிய இந்த சட்னியை டாங்கர் என்றும் கூறுவர்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 1 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
  2. 1 பெரிய பூண்டு
  3. 1 தக்காளி
  4. 2 வர மிளகாய்
  5. 1 தேக்கரண்டி கடுகு
  6. 2மேசைக்கரண்டி நல்லெண்ணெய்
  7. 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள்
  8. 1 கொத்து கறிவேப்பிலை
  9. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  10. 1.5 தேக்கரண்டி மிளகாய் தூள்
  11. 1 மேஜைக்கரண்டி வெல்லம்
  12. 1 கப் தண்ணீர்
  13. 1 மேஜைக்கரண்டி உப்பு
  14. வதக்கி அரைக்க தேவையானவை:
  15. 2 பெரிய வெங்காயம்
  16. 1மேசைக்கரண்டி நல்லெண்ணெய்
  17. 1 தக்காளி
  18. 1நெல்லிக்காய் அளவு புளி
  19. 5வர மிளகாய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் சூடானதும் வெங்காயம், புளி, வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியபின் தக்காளியும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.இதனை ஆற விட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் மேலும் 2 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்கவும்.

  3. 3

    பொரிந்ததும் பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதன்பின் வரமிளகாய் பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து மசிய வதக்கிக் கொள்ளவும்.அதன் பின் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்.பின் அரைத்த வெங்காய தக்காளி விழுதை சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    ஒரு கப் தண்ணீரை சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளவும். இதனை மிதமான தீயில் எட்டு நிமிடங்கள் வேகவிடவும்.

  6. 6

    சட்னி தள தள என்று கொதித்து வந்தபின் வெல்லம் சேர்த்து அடுப்பை அணைக்கவும். காரசாரமான செட்டிநாடு கொறடா சட்னி வெள்ளைப் பணியாரத்துடன் பரிமாறினால் சுவையாக இருக்கும். இது இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (5)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
என்னுடைய நெய்பர் காரைக்குடி , அவங்ககிட்ட கத்துக்கிட்டேன் சிஸ்டர்

எழுதியவர்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes