கும்பகோணம் கொஸ்து(Kumbakonam kosthu recipe in tamil)

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

இந்த ரெசிபி எங்கள் மாமியார் வீட்டு ஸ்பெஷல் எங்க அத்தை எனக்கு கற்றுக் கொடுத்தது செய்வது மிக சுலபம் ருசியும் அபாரம்.(egg plant kosthu)#ga4week9#

கும்பகோணம் கொஸ்து(Kumbakonam kosthu recipe in tamil)

இந்த ரெசிபி எங்கள் மாமியார் வீட்டு ஸ்பெஷல் எங்க அத்தை எனக்கு கற்றுக் கொடுத்தது செய்வது மிக சுலபம் ருசியும் அபாரம்.(egg plant kosthu)#ga4week9#

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 ஐந்து பேர்
  1. 7சிறியகத்தரிக்காய்
  2. 2பெரிய வெங்காயம்
  3. 1தக்காளி பழம் பெரியது
  4. ஒரு துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது
  5. 2பச்சை மிளகாய்
  6. சிறிதளவுபெருங்காயம்
  7. புளி கோலி குண்டு அளவு
  8. கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளிப்பதற்கு
  9. சிறிதளவுமஞ்சத்தூள்
  10. வறுத்து அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
  11. 5வர மிளகாய்
  12. டேபிள் ஸ்பூன்தனியா விதை
  13. 3 டேபிள்ஸ்பூன்பொட்டுக்கடலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    படத்தில் காட்டியபடி எடுத்து வைத்துள்ள பொருட்களை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயம் கடலைப்பருப்பு தாளிக்கவும் ஒன்றன்பின் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து பொருட்களையும் நன்கு வதக்கவும் தேவையான அளவு மஞ்சள்தூள் உப்பு தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விட்டு இறக்கவும் விருப்பப்பட்டால் கருப்பு கொண்டை கடலை சேர்த்துக்கொள்ளலாம்.

  3. 3

    தவாவில் எண்ணெய் இல்லாமல் வரமிளகாய் தனியா விதையை நன்கு பச்சை வாசம் போகும் வரை இளம் சிவப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் அதனுடன் பொட்டுக்கடலை சேர்த்து மிதமான சூட்டில் 2 நிமிடம் வதக்கவும் பிறகு இக்கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    இந்த பொடியை ஊற வைத்த குளிக்க ஊற வைத்துள்ள புளி கரைசலில் சேர்க்கவும் அதனுடன் எடுத்து வைத்துள்ள வெல்லத்தையும் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    குக்கரில் உள்ள வைத்த பொருட்களில் சற்று நீரை இழுத்துகரண்டியால் மசித்து விடவும் பிறகு தண்ணீரை சேர்க்கவும்.

  6. 6

    கரைத்து வைத்துள்ள கரைசலை வேக வைத்துள்ள கத்தரிக்காயில் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும் மல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes