இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#wt1
இதில் புரதச்சத்து அதிகம் மிகுந்த பருப்பு வகைகளை சேர்த்துள்ளேன்.வழக்கமாக செய்யும் மிளகாய் பொடியை விட இந்த இட்லி மிளகாய்ப்பொடி மிகவும் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒருமுறை நீங்களும் செய்து பாருங்கள்.இந்தக் குளிர் காலத்திற்கு சூடாக்கி ஊற்றி இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து குழைத்து இட்லியுடன் தொட்டு சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும்.

இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil)

#wt1
இதில் புரதச்சத்து அதிகம் மிகுந்த பருப்பு வகைகளை சேர்த்துள்ளேன்.வழக்கமாக செய்யும் மிளகாய் பொடியை விட இந்த இட்லி மிளகாய்ப்பொடி மிகவும் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒருமுறை நீங்களும் செய்து பாருங்கள்.இந்தக் குளிர் காலத்திற்கு சூடாக்கி ஊற்றி இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து குழைத்து இட்லியுடன் தொட்டு சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
500 gms
  1. 2 டம்ளர் குண்டு வெள்ளை உளுத்தம்பருப்பு
  2. 1/2 டம்ளர் கடலைப்பருப்பு
  3. 50 கிராம் அளவிற்கு பொட்டுக்கடலை
  4. 1 தம்ளர் வெள்ளை எள்ளு
  5. 2 டேபிள் ஸ்பூன் கொள்ளு
  6. 25 வர மிளகாய். அல்லது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப
  7. 3 டேபிள் ஸ்பூன் அளவுஉப்பு சுமாராக அல்லது தங்கள் தேவைக்கேற்ப
  8. 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மேற்கூறிய தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும். மிளகாய் உங்கள் காரத்திற்கேற்ப கூடவோ குறைத்தோ எடுத்துக் கொள்ளலாம். உப்பும் அதேபோல் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப.

  2. 2

    ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு இரண்டு டம்ளர் உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்துக்கொள்ளவும். ஒரு ஒரு டம்ளராக வறுத்துக்கொள்ளவும் விரைவில் சிவந்து கொள்ளும். ஒரு தட்டில் கொட்டி கொள்ளவும். இதேபோல் கடலைப்பருப்பையும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து.நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும். அதன் பிறகு எள் சிவந்து வெடிக்கும் அளவிற்கு எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக்கொள்ளவும். பொட்டுக் கடலையில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து கொள்ளவும். கொள்ளும் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து கொள்ளவும். உப்பு சூடேற வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    வரமிளகாயை கொஞ்சம் எண்ணெய் சேர்த்து வாசம் வர நெடி வர சிவக்க வறுக்கவும். மேற்கூறிய எல்லா பொருட்களையும் தனித்தனியாக ஆற வைத்துக் கொள்ளவும். முதலில் ஆறிய உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பொட்டுக்கடலை கொள்ளு உப்பு இவைகளை மிக்ஸியில் சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு தனி பாத்திரத்தில் கொட்டி கொள்ளவும்.பிறகு வரமிளகாயை சிறிய மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். பிறகு எள்ளு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ரொம்ப அரைத்தால் எண்ணெய் பிரிந்து வரும். அதனால் பார்த்து எள்ளு அரைத்க.

  4. 4

    இவை அனைத்தையும் ஒரு வாணலியில் போட்டு ஒரு கரண்டி கொண்டு நன்றாக கலக்கி கொள்ளவும்.மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் இந்த கலவையை ஓட விடவும். அப்படியே கலந்தால் நல்ல கலர் வராது. அனைத்து பொடிகளையும் கலந்து விட்டு மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அரைத்தால் கலர் சிவக்க வரும். மூன்றாவது படத்தில் வித்தியாசம் காட்டி உள்ளேன். இது டிப்ஸ்.

  5. 5

    இப்போது இரண்டாவது முறை அழைத்த இட்லி பொடியை மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து கொள்ளவும் உப்பு பார்த்து தேவை என்றால் இரண்டாவது முறை அழைக்கும் பொழுது சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.சுவையான, புரதம் சத்துக்கள் நிறைந்த உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, எள்ளு கொள்ளு அனைத்தும் கொண்டு அரைத்த ஆரோக்கியமான இட்லி பொடி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes