சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை களைந்து ஊற வைக்கவும்.
வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பாதாமை அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
சஃப்ரானை ஒரு மேசைக்கரண்டி சூடான பாலில் கரைத்து வைக்கவும்.
- 2
மட்டனை சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, ஏலம், பிரிஞ்சி இலை, ஷாஜீரா, கிராம்பு ஆகியவற்றை போடவும். லேசாக பொரிந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு சுருங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 3
தன் பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கவும்.
குக்கரை மூடி தீயை மிதமாக வைத்து 10 நிமிடம் மட்டனை வேக விடவும்.
இப்போது மட்டன் லேசாக வெந்து சுருண்டு இருக்கும். அதனுடன் தக்காளி, கொத்தமல்லி தழை மற்றும் புதினாவை சேர்த்து கிளறவும்.
தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.
- 4
தன் பின்னர் தயிர், பாதாம் விழுது, பாலுடன் கரைத்து வைத்திருக்கும் சஃப்ரான் ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.
எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும். அப்படியே ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.
- 5
பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கிளறவும். தண்ணீர் சேர்த்து, பின்னர் ஒரு கொதி வந்ததும் களைந்து வைத்திருக்கும் அரிசியை சேர்க்கவும்.
அரிசியை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் குக்கரை மூடி வெய்ட் போட்டு தீயை மிதமாக வைத்து இரண்டு விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.
- 6
ஆவி அடங்கியதும் மூடியை திறந்து சாதத்தை பிரட்டி விட்டு உடனே வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். அப்படியே விட்டால் கட்டி பிடித்து விடும்.
சுவையான மட்டன் பிரியாணி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பீட்ரூட் ரைஸ்
#மதியவுணவுபீட்ரூட் சேர்த்து செய்வதால் சற்று இனிப்பு சுவையுடன் இருக்கும். வித்தியாசமான சுவையுடன் கூடிய வெரைட்டி ரைஸ். ரைத்தாவுடன் பரிமாறலாம். Natchiyar Sivasailam -
வெண்டைக்காய் மசாலா
#மதியவுணவுவெண்டைக்காய் மசாலா ஒரு அருமையான ரெசிபி. சாம்பார் சாதம், ரசம் சாதம், வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றோடு சாப்பிட ஏற்றது. Natchiyar Sivasailam -
-
-
-
மசாலா ரைஸ்
#மதியவுணவுவடித்த சாதம் மற்றும் சில காய்கறிகள் சேர்த்து பதினைந்து நிமிடங்களில் செய்து விடலாம். மிகவும் சுவையான ரைஸ். சிப்ஸ் மற்றும் ரைத்தாவோடு பரிமாறலாம். Natchiyar Sivasailam -
வெஜ் லேயர் பிரியாணி
#NP1 இந்த பிரியாணி கலர்ஃபுல்லாக குழந்தைகளுக்குப் மிகவும் பிடித்த பிரியாணி ரெசிபி Cookingf4 u subarna -
-
-
கறிவேப்பிலை குழம்பு
#மதிய உணவுகறிவேப்பிலையை சமையலில் சேர்க்கும் போது அதைப் பொதுவாக யாரும் சாப்பிடுவது கிடையாது. அதனால் கறிவேப்பிலை குழம்பு செய்து சாப்பிடும் பொழுது கறிவேப்பிலையின் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். மிகவும் சுவையான, சத்தான குழம்பு. Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கம்பு மாவு இடியாப்பம்
#காலைஉணவுகள்கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
-
-
-
-
More Recipes
கமெண்ட்