திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி

சீரகசம்பா அரிசியானது தமிழ்நாட்டில் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளில் அதிகமாக விளைநிலங்களில் பயிரிடப்படுகிறது. அதனால் சீரக சம்பா அரிசி தமிழகத்தில் பாஸ்மதி அரிசியை விட மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியில் இந்த சீரக சம்பா அரிசியை கொண்டு தான் செய்வார்கள். பிரியாணியை பிரியாணி அண்டாவில் விறகு அடுப்பில் தம் போட்டு செய்வது தனி ருசிதான். #salna #biryani
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி
சீரகசம்பா அரிசியானது தமிழ்நாட்டில் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளில் அதிகமாக விளைநிலங்களில் பயிரிடப்படுகிறது. அதனால் சீரக சம்பா அரிசி தமிழகத்தில் பாஸ்மதி அரிசியை விட மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியில் இந்த சீரக சம்பா அரிசியை கொண்டு தான் செய்வார்கள். பிரியாணியை பிரியாணி அண்டாவில் விறகு அடுப்பில் தம் போட்டு செய்வது தனி ருசிதான். #salna #biryani
சமையல் குறிப்புகள்
- 1
4 டம்ளர் சீரகசம்பா அரிசியை நன்றாக அலசி தண்ணீரில் சமைப்பதற்கு அரை மணி நேரம் முன்னர் ஊற வைக்கவும்.
- 2
முதலில் பிரியாணிக்கு வீட்டிலேயே பிரியாணி மசாலா செய்து வைத்துக் கொள்ளவும். அதற்கு பட்டை (4), லவங்கம் (12), ஏலக்காய் (4), மிளகு 1- டேபிள்ஸ்பூன் மற்றும் சோம்பு 1- டேபிள் ஸ்பூன்.
- 3
இதை வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக் கொண்டு அதை ஒரு மிக்ஸியில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். மட்டன் பிரியாணி மசாலா தயார்.
- 4
1/2 கிலோ மட்டனை நன்றாகக் கழுவி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். வேக வைத்த மட்டன் 1 - டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1- கரண்டி தயிர் மற்றும் 2 - டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறி ஊர வைத்துக் கொள்ளவும்.
- 5
வெளிச்சமாக காற்றோட்டம் நிறைந்த இடத்தில் ஒரு அடுப்பை வைத்து,அடுப்பு எரிய தேவையான வரகை வைத்து பற்ற வைத்துக் கொள்ளவும்.
- 6
அடுப்பு நன்றாக பற்றிய பிறகு அதன் மேல் பிரியாணி குண்டான் வைக்கவும்.
- 7
பிரியாணி குண்டான் சூடேறிய பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
- 8
எண்ணெய் காய்ந்தவுடன் அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய்,பிரியாணி இலை மற்றும் ஸ்டார் பட்டை சேர்த்துக் கொள்ளவும்.
- 9
இப்போது அதில் 7 பச்சை மிளகாயை ஒன்றும் பாதியுமாக அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
- 10
பொடிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.
- 11
பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது - 4 டேபிள் ஸ்பூன் மற்றும் புதினா சேர்த்துக் கொள்ளவும்.
- 12
ஒரு தட்டு போட்டு மூடி வெங்காயம் பொன்னிறமாக மாறும்வரை மற்றும் இஞ்சி பூண்டின் பச்சை வாடை போகும் வரை நன்றாக எண்ணெயில் வதக்கவும்.
- 13
பின்னர் அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். என்னை ஓரங்களில் படியும் வரை நன்றாக வதக்கி விடவும்.
- 14
இதில் நன்றாக ஊற வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும்.
- 15
அதில் அரைத்து வைத்த பிரியாணி மசாலா 1 டேபிள்ஸ்பூன் வெறும் மிளகாய் தூள், 1- டேபிள்ஸ்பூன் கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 16
இப்பொழுது ஆறு டம்ளர் தண்ணீரை பிரியாணி குண்டானில் ஊற்றிக் கொள்ளவும். (4 டம்ளர் அரிசிக்கு ஆறு டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும்)
- 17
தண்ணீர் 2 கொதி வந்தவுடன் ஊற வைத்திருக்கும் அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து, வெறும் அரிசியை பிரியாணி குண்டானில் சேர்க்கவும்.
- 18
நன்றாக கிளறி ஒரு தட்டு போட்டு மூடி வேக விடவும்.
- 19
85% அரிசி வெந்தவுடன் அடுப்பிலிருந்து அடுப்புக் கரியை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.
- 20
பின்னர் அடுப்பில் வைத்திருக்கும் விறகு கட்டைகளை எடுத்து விடவும். பிரியாணி குண்டானை எடுத்து வைத்திருக்கும் அடுப்புக்கரி தட்டினை கொண்டு மூடி தம் போடவும்.
- 21
சுமார் 20 முதல் 25 நிமிடம் வரை தம் இப்படி இருக்க வேண்டும். பின்னர் புதினா இலைகளை மேலே தூவி விடவும்.
- 22
சுவையான மண மணக்கும் திண்டுக்கல் தலப்பாக்கட்டி சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார். இதனை ரைத்தா மற்றும் சால்னா உடன் வைத்து சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
-
திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி
#np1திண்டுக்கல் மட்டன் பிரியாணி தென்னிந்தியாவின் பிரபலமான பிரியாணிகளில் ஒன்று. இதில் கையால் தயாரிக்கப்பட்ட பிரியாணி மசாலாவைச் சேர்ப்போம், இது பிரியாணிக்கு நல்ல சுவையைத் தருகிறது. உண்மையான சுவை பெற சீராகா சம்பா அரிசியைப் பயன்படுத்தி இந்த பிரியாணியை உருவாக்கவும். வீட்டில் உணவக பாணியில் தலப்பாக்கட்டி பிரியாணியைத் தயாரிக்க,கீழே உள்ள பதிவை பார்க்கவும். Swathi Emaya -
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
சீரக சம்பா சிக்கன் பிரியாணி
சீராகா சம்பாவுடன் பிரியாணி சின்னமானவர். தெற்கில் பலருக்கு, குறிப்பாக திண்டுக்கலில் சீராகா சம்பா இல்லாமல் பிரியாணி இல்லை. முயற்சி செய்து, இது உங்களுக்கு எவ்வாறு வேலை செய்கிறது என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். #goldenapron3 #book Vaishnavi @ DroolSome -
-
சீரக சம்பா மட்டன் பிரியாணி
#nutrient1 #book ஆட்டிறைச்சியில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளாக சோடியம், பொட்டாயம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
-
-
பொன்னி ரைஸ் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#Biryani#week16பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் .ஆனால் நாம் பாஸ்மதி ரைஸ் சீரகசம்பா போன்ற அரிசியில் செய்யும் போது ஒரு சில நேரம் அரிசி குழைந்துவிட கூடும்ஆனால் பொன்னி அரிசியில் பிரியாணி செய்யும்போது பொலபொலவென்று ருசியாக இருக்கும். சீரக சம்பா அரிசி சுவையில் பொன்னி அரிசி மட்டன் பிரியாணி Sangaraeswari Sangaran -
திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
#vattaramweek 3திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி Sowmya -
பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி
#salnaபிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம். Asma Parveen -
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
தேங்காய்பால் மட்டன் தம் பிரியாணி
#Npl ஜீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணியை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
-
கேரளா ஸ்டைல் மட்டன் ஸ்டியூ
#combo2தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணையின் சுவை கலந்த இந்த மட்டன் ஸ்டியூ மிகவும் ருசியாக இருக்கும். ஆப்பம் மற்றும் இடியாப்பத்திற்கு பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
-
-
-
-
-
-
ஆம்பூர் மட்டன் பிரியாணி (Aambur mutton biryani recipe in tamil)
#onepot ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி மட்டனை தனியாக வேக வைத்து அரிசியை தனியாக வேக வைத்து பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து தம் செய்வார்கள் நான் ஆம்பூர் பிரியாணி குக்கரில் ஒரே முறையில் முயற்சித்துப் பார்த்தேன் சுவையில் எந்த மாற்றமும் இல்லை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
மட்டன் கீமா தம் பிரியாணி (mutton keema dum biriyani recipe in tamil)
# முதியவர் கூட ருசிக்க #பொன்னி அரிசி தம் பிரியாணி Gomathi Dinesh -
More Recipes
கமெண்ட் (6)