தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 250 கிராம் மீன்,(5 துண்டு மீன்)
  2. 250 கிராம் சீரக சம்பா
  3. 2 பெரிய வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1கை அளவு மல்லி, பாதி புதினா
  7. தாளிக்க :ஒரு பட்டை, கிராம்பு, இலை, பூ
  8. சிறிதுசீரகம், சோம்பு
  9. 1.5 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  10. 0.5 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள்:மசாலா தடவிய மீன் எடுத்து கொள்ளவும்.

  2. 2

    நெய், ஆயில் 4 டேபிள் ஸ்பூன் சேர்த்து, பட்டை, கிராம்பு, இலை, பூ, சீரகம், சோ ம்பு சேர்த்து தாளிக்கவும், பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பொன் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

  3. 3

    பின் தக்காளி உப்பு சேர்த்து நன்கு கிளறவும், தக்காளி வதங்கிய பின் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கொள்ளவும், வேண்டும் எனில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கொள்ளவும். மசாலா ஆயில் பிரியும் வரை கிண்டவும்.

  4. 4

    மல்லி, புதினா இலை சேர்த்து கொள்ளவும், பிறகு ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் வீதம் சேர்த்து, அரிசி யை குக்கரில் சேர்க்க வேண்டும், ஒரு கிளறுங்கள் பின் 3 துண்டு மீன் சேர்த்து கொள்ளவும்.மீனையும் சேர்த்து விசில் வைத்தால் மீன் சுவை சாதத்தில் நன்றாக இறங்கி இருக்கும். முள் குறைவான மீனாக எடுத்து கொள்வது நல்லது.

  5. 5

    ஒரு விசில் விட்டு பின் இறக்கி வேற பாத்திரத்தின் போட்டு ஆற விடவும். 2 துண்டு மீன் தோசை கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.சுட்ட மீனை யு‌ம் சேர்த்து பறி மாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

செம்பியன்
அன்று
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA பல்சுவை
மேலும் படிக்க

Similar Recipes