சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பட்டை கிராம்பு பச்சை மிளகாய் தனியா கடற்பாசி ஏலக்காய் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் 3 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றவும். அதில் சிறிதளவு பட்டை, ஏலக்காய்,கிராம்பு, சேர்க்கவும் பிரியாணி இலை சேர்க்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை முதலில் சேர்க்கவும் வெங்காயம் நன்றாக வதக்கவும்,
- 3
பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.பின்பு புதினா இல்லை 3 பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
பின்பு வெட்டி வைத்த தக்காளி உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
பின்பு இதில் அரைத்து வைத்த பொடியை சேர்க்கவும் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 6
தயிர் சேர்த்து நன்றாக வதக்கிய பின் காளான் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் பட்டை கிராம்பு பிரியாணி இலை உப்பு சேர்த்து சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
- 7
இதில் அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரிசியை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். அரிசி முக்கால் பாகம் வெந்தவுடன் அதை வடிகட்டவும்.
- 8
வதக்கிய கலவையுடன் முக்கால் பாகம் வெந்த அரிசி மல்லி இலை கலர் சேர்த்து வேகவிடவும்.
- 9
ஒரு கடாயில் ஆயில் சேர்த்து அதில் வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி அதை நன்றாக வதக்கவும்.
- 10
வதக்கிய கலவையும் அந்த அரிசியின் மேல் சேர்க்கவும. பின்பு பாத்திரத்தை மூடி வைத்து அதன் மேல் தண்ணீர் நிரம்பிய ஒரு பாத்திரத்தை மேல் வைத்து காற்று புகாதவாறு 20 நிமிடங்கள் குறைவான தீயில் வேக விடவும். இப்பொழுது சுவையான காளான் தம் பிரியாணி ரெடி.
- 11
இப்பொழுது சுவையான காளான் தம் பிரியாணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குக்கர் காளான் பிரியாணி
#NP1விரத நாட்களில், அசைவ பிரியாணிக்கு பதில் அதை சுவையில் இருக்கும் காளான் பிரியாணி Shailaja Selvaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)