எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. இரண்டு டம்ளர் சீரக சம்பா அரிசி
  2. இரண்டு டப்பா காளான்
  3. 3/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1ஸ்பூன் பிரியாணி மசாலா
  5. கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. ஒரு பட்டை
  7. மூன்று கிராம்பு
  8. இரண்டு ஏலக்காய்
  9. 2பிரியாணி இலை
  10. ஒரு கைப்பிடி புதினா
  11. 1கைப்பிடி கொத்தமல்லி இலை
  12. இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  13. ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு
  14. இரண்டு ஸ்பூன் கெட்டி தயிர்
  15. 2 பெரிய வெங்காயம்
  16. இரண்டு தக்காளி
  17. 2 பச்சை மிளகாய்
  18. தேவையானசமையல் எண்ணெய்
  19. தேவையானஅளவு தண்ணீர்
  20. தேவையானஅளவு உப்பு
  21. மூன்று ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பிரியாணி மசாலா செய்ய
    மூன்று கிராம்பு ஒரு பட்டை 2 ஏலக்காய் லேசாக சூடு செய்து உரலில் போட்டு இடித்து வைக்கவும் அரிசியை மூன்று முறை கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    அடுப்பில் குக்கரை வைத்து 50ml ரீபைண்ட் ஆயில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை தாளித்து வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி போட்டு நன்கு வதக்கவும் பச்சை மிளகாய் வெட்டி சேர்க்கவும்

  3. 3

    பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் தக்காளியை சேர்த்து அதனை ஜூஸ் வெளியே வரும் வரை நன்கு வதக்கி மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் பிரியாணி மசாலா சேர்த்து வதக்கவும்

  4. 4

    பிறகு காளானை சுத்தம் செய்து இரண்டு மூன்றாக வெட்டி போட்டு லேசாக வதக்கவும் காளான் வதங்கியதும் அரிசியை தண்ணீர் வடித்து அதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும் பிறகு மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு கைப்பிடி அளவு புதினா கொத்தமல்லி ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

  5. 5

    கொதிவந்தவுடன் குக்கரை மூடி விசில் போடாமல் அடுப்பை சிம்மில் பத்து நிமிடம் வைக்கவும் அரிசி நன்கு வெந்து விடக்கூடாது அரைப் பதம் வெந்து தண்ணீர் எல்லாம் வற்றியவுடன் விசில் போட்டு 10 நிமிடம் சிம்மில் வைக்கவும் பிறகு அடுப்பை அணைத்து விசில் அடங்கும் வரை

  6. 6

    விசில் அடங்கியதும் மூடியைத் திறந்து ஒரு ஸ்பூன் நெய்யை சுற்றிலும் விட்டு அடி வரை லேசாக கிளறவும் கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறவும் காளான் பிரியாணி ரெடி வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes