கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#Np1
கல்யாண வீட்டில் ஸ்பெஷல் என்றால் பிரிஞ்சி சாதம் தான் நினைவில் வரும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 டம்ளர் பாசுமதி அரிசி
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 2 கேரட்
  5. பச்சை பட்டாணி சிறிதளவு
  6. பீன்ஸ் சிறிதளவு
  7. 1உருளைக்கிழங்கு
  8. 1கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை
  9. 1கைப்பிடி அளவு புதினா இலை
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. பட்டை,கிராம்பு,பிரியாணி இலை தேவையான அளவு
  13. கருவேப்பில்லை சிறிதளவு
  14. 2 துண்டு இஞ்சி
  15. 6 பல் பூண்டு
  16. 4 பச்சை மிளகாய்
  17. 1 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  18. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  19. 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள்
  20. 2 ஸ்பூன் புளிக்காத தயிர்
  21. 4 பிரட்
  22. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் விட்டு பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் கடல்பாசி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கி வைத்த வெங்காயம் தக்காளி ஆகியவற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கியவுடன் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு காய்கறிகளை எடுத்துக் கொள்ளவும். நான் கேரட், பச்சைப் பட்டாணி பீன்ஸ் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி வைத்து எடுத்துக்கொண்டேன்.

  3. 3

    வெங்காயம் தக்காளி உடன் நறுக்கி வைத்த காய்கறிகள் சேர்த்து ஒரு கைப்பிடி அளவு புதினா இழை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு துண்டு இஞ்சி பூண்டு காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் புதினா மற்றும் கொத்தமல்லி தலை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    காய்கறிகள் வதங்கியவுடன் அரைத்து வைத்த விழுதை சேர்த்து வதக்கவும். பின்பு கரம் மசாலா மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

  6. 6

    அதனுடன் மஞ்சள் தூள் சிறிதளவு உப்பு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். நான் ஒரு டம்ளர் பாஸ்மதி அரிசியை எடுத்து 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். மசால் வாடை போனவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

  7. 7

    அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 2 கப் புளிக்காத தயிர் சேர்த்துக் கொள்ளவும். அல்லது தேங்காய்ப் பால் சேர்த்துக் கொள்ளலாம்.

  8. 8

    தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 2 விசில் விட்டு அடுப்பை அணைத்துவிட்டு தம் போடவும்.

  9. 9

    ஒரு தடவையில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் எடுத்து சூடேற்றவும் நான்கு பிரட் எடுத்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் அதை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

  10. 10

    நன்றாக சிவக்க பொறித்து எடுத்து பிரியாணியுடன் சேர்த்து கிளறவும்.

  11. 11

    சுவையான கல்யாண வீட்டு பிரிஞ்சி பிரியாணி தயார். தயிர் வெங்காயம் கொத்தமல்லித் துவையல் உருளைக்கிழங்கு வறுவல் செய்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes