குடைமிளகாய் உருளைக்கிழங்கு வறுவல் (Capsicum Potato fry)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

குடைமிளகாய் உருளைக்கிழங்கு வறுவல் (Capsicum Potato fry)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4பேர்
  1. 2 பச்சை குடைமிளகாய்
  2. 2உருளைக்கிழங்கு
  3. 1/4கப் சாம்பார் வெங்காயம்
  4. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  5. 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1/4டீஸ்பூன் கரம்மாசலா தூள்
  7. 1/4டீஸ்பூன் சோம்பு தூள்
  8. உப்பு தேவையான அளவு
  9. 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  10. 1/4டீஸ்பூன் கடுகு
  11. 1/4டீஸ்பூன் உழுந்துபருப்பு
  12. 1/4டீஸ்பூன் கடலைப்பருப்பு
  13. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    குடைமிளகாய், உருளைக்கிழங்கு,வெங்கா
    யத்தை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து,கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  3. 3

    பின் நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

  4. 4

    நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வறுக்கவும்.

  5. 5

    பின் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும்.

  6. 6

    மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்கள் வறுத்து, உப்பு,மேலே கொடுத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும்.

  7. 7

    எல்லாம் நன்கு வதங்கியதும்,சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வறுத்து எடுக்கவும்.

  8. 8

    நன்கு பொன்னிரமாக வறுத்து எடுத்து,பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.

  9. 9

    இப்போது மிகவும் சுவையான குடைமிளகாய், உருளைக்கிழங்கு வறுவல் சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes