தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பரிமாறுவது
  1. தாளிக்க
  2. பட்டை,ஏலக்காய்,கிராம்பு, பிரியாணி இலை, கடற்பாசி
  3. சோம்பு - 1தேக்கரண்டி
  4. வெங்காயம் - 3
  5. பச்சை மிளகாய் - 3
  6. தக்காளி - 2
  7. சிக்கன் - 1/2 கிலோ
  8. அரிசி - 1/2 கிலோ
  9. மசாலா பொருட்கள்
  10. மஞ்சள் - 1/4 தேக்கரண்டி
  11. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  12. மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
  13. பிரியாணி மசாலா - 1 தேக்கரண்டி
  14. இஞ்சி பூண்டு கலவை - 3 தேக்கரண்டி
  15. கொத்த மல்லி 1 கை, புதினா 1 கை பிடி
  16. தயிர் - 1/2 கப்
  17. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் அரிசியை சுத்தம் செய்து 20 நிமிடங்கள் ஊர வைக்க வேண்டும்.

  2. 2

    பின் சிக்கனில் மிளகாய் தூள்-1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் சிறிது, தயிர் - 3 தேக்கரண்டி சேர்ந்து கலந்து ஊர வைக்க வேண்டும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் உத்தி அதில் தாளிக்க எடுத்துள்ள பொருட்களை சேர்ந்து கொள்ள வேண்டும்.

  4. 4

    அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்ந்து நன்றாக வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  5. 5

    பின் தக்காளி சேர்ந்து வதக்கவும். அதில் மசாலா தூள்களை சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.அதில் உப்பு தேவைக்கேற்ப சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.

  6. 6

    அதில் தயிர் உத்தி கலந்து கொள்ள வேண்டும்.

  7. 7

    அதில் சிக்கனை சேர்ந்து கலந்து 5நிமிடங்கள் முடி வேகவைக்க வேண்டும்.

  8. 8

    பின் தண்ணீர் கொதிக்கும் போது அரிசியை சேர்ந்து கொத்த மல்லி, புதினா சேர்ந்து நன்றாக வெகவைக்க வேண்டும்.

  9. 9

    சுவையான சிக்கன் பிரியாணி தயார்.

  10. 10

    நன்றி
    வணக்கம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஹரி கிருஷ்ணன்
அன்று

Similar Recipes