தேங்காய் மற்றும் வெல்லம் தோசை

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

வெல்லம் கலந்ததால் sidedish தேவையில்லை
#everyday1

தேங்காய் மற்றும் வெல்லம் தோசை

வெல்லம் கலந்ததால் sidedish தேவையில்லை
#everyday1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் இட்லி அரிசி
  2. 2 தேங்காய்ச்சில்
  3. தேவைக்கேற்ப வெல்லம், நெய், உப்பு, தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை 1 மணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    பின் மிக்ஸி ஜாரில் அரிசி, தேங்காய், உப்புச் சேர்த்துக் கொள்ளவும் இதற்கு அரைக்கும் போது தேவைப்படும் தண்ணீர்க்கு ரெடிச் செய்ய வேண்டும்

  3. 3

    சுவைக்கேற்ப வெல்லம் எடுத்துதண்ணீரில் சூடுச் செய்யவும் வெல்லம் கரைந்தால் மட்டும் போதும் பதத்திற்கு வர அவசியம் இல்லை

  4. 4

    அரைக்க ஆரம்பிக்கவும் தண்ணீருக்கு வெல்லம் சூடுச் செய்ததை ஆறவைத்து ஊற்றிக் கொள்ளவும்

  5. 5

    தோசைப்பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்

  6. 6

    வேறுப்பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்

  7. 7

    பின் கல்லில் ஊற்றிக் கொள்ளவும் இதை பனியாரக் குழியிலும் ஊற்றலாம் சுவையாக இருக்கும்

  8. 8

    பின் தோசையில் நெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்

  9. 9

    சுவையான தேங்காய் வெல்லம் போட்ட தோசை ரெடி சுவைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes