எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1கப் தினை அரிசி
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 2பிரியாணி இலை
  6. 1/2 ஸ்பூன் பட்டைத்தூள்
  7. 1/2 ஸ்பூன் கிராம்புத்தூள்
  8. 1/2 ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  9. 1/2 ஸ்பூன் மஞ்சத்தூள்
  10. 2 பச்சை மிளகாய்
  11. 3 கேரட்
  12. 8-10 பீன்ஸ்
  13. 1/2 கப் பச்சைப் பட்டாணி
  14. 2 கப் தண்ணீர்
  15. உப்பு தேவையான அளவு
  16. புதினா, கொத்தமல்லி இலை சிறிதளவு
  17. 2 ஸ்பூன் நெய்
  18. 2 ஸ்பூன் எண்ணெய்
  19. கவுனி அரிசி மாவு செய்ய:-
  20. 1கப் இட்லி அரிசி
  21. 1 கப் கவுனி அரிசி
  22. 100 கிராம் முழு உளுந்து
  23. 1/2டீஸ்பூன்வெந்தயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் திணையை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். அடுத்து ஒரு குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை, நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்தது தக்காளியை சேர்த்து வதக்கவும் தக்காளி பாதி வதங்கியதும் இதில் உப்பு தேவையான அளவு, பட்டை தூள், ஏலக்காய் தூள், புதினா, கிராம்புத்தூள், மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். பிறகு காய்கறிகளை சேர்க்கவும்.

  2. 2

    ஒரு கப் தினை அரிசி இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். அடுத்து இதில் தண்ணீரை வடித்த திணையை சேர்க்கவும். குக்கர்'ரை மூடவும். ஆவி வந்ததும் வெயிட் போட்டு 2 விசில் வரும் வரை வேகவிடவும். பிரஷர் போன பின், குக்கர்'ரை திறக்கவும். இதன் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.

  3. 3

    கவுனி அரிசி மாவு அரைக்க:-
    இட்லி அரிசி மற்றும் கவுனி அரிசியை நன்கு கழுவி 4 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்து மற்றும் வெந்தயத்தை நன்கு கழுவி ஊற வைக்கவும். 4 மணி நேரம் கழித்து கிரைண்டரில் ஊறவைத்த உளுந்தை சேர்த்து அரைக்கவும். பிறகு அரிசி அரைக்கவும். அரைத்த மாவை உப்பு சேர்த்து கலந்து 6 மணி நேரம் வைக்கவும்.6 மணி நேரம் கழித்து தாவா'வை சூடு செய்து, மாவை ஊற்றவும். அதன் மேல் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து எண்ணெய் ஊற்றி சுடவும்.

    (சுவையான தினை கிச்சடி கவுனி அரிசி ஊத்தாப்பம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes