ராகி தோசை (Finger millet dosa)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

ராகியை வைத்து நிறைய விதத்தில் உணவு கல் தயார் செய்யலாம். நான் தோசை செய்துள்ளேன். இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.
#Everyday1

ராகி தோசை (Finger millet dosa)

ராகியை வைத்து நிறைய விதத்தில் உணவு கல் தயார் செய்யலாம். நான் தோசை செய்துள்ளேன். இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.
#Everyday1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
  1. 2கப் முழு ராகி
  2. 1/2 கப் முழு உளுந்து
  3. 1 டீஸ்பூன் வெந்தயம்
  4. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ராகியை தண்ணீரில் நன்கு கழுவி பத்து மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    உளுந்து, வெந்தயம் சேர்த்து நன்கு கழுவி தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

  3. 3

    பின்னர் மிக்ஸி ஜாரில் ராகி,உளுந்து வெந்தயம் எல்லாம் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.

  4. 4

    அரைத்த மாவில் உப்பு சேர்த்து நன்கு கலந்து இரவு முழுதும் புளிக்க வைக்கவும்.

  5. 5

    மறுநாள் காலையில் தோசை ஊற்றலாம். தோசை தவவாவை ஸ்டவில் வைத்து சூடானதும் அரைத்த ராகி மாவை நன்கு கலந்து ஊற்றி மெலிதாக தேய்த்து விடவும். எலேசக எண்ணெய் ஊற்றவும்.

  6. 6

    நன்கு காய்ந்ததும் மறுபக்கம் திரும்பிப் போட்டு எடுக்கவும்.

  7. 7

    இப்போது மிகவும் சத்துக்கள் நிறைந்த,சுவையான,மொறுமொறு ராகி தோசை சுவைக்கத்தயார்.

  8. 8

    இந்த ராகி தோசை தக்காளி, வேர்கடலை சட்னி,தேங்காய் சட்னி,கொத்தமல்லி சட்னி போன்ற எல்லா சட்னியுடனும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes