ஸ்வீட் அன்ட் ஸ்பைசி ட்ரை கலர்   சாண்ட்விச் (Sweet and Spicy Tricolour Sandwich)

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil

ஸ்வீட் அன்ட் ஸ்பைசி ட்ரை கலர்   சாண்ட்விச் (Sweet and Spicy Tricolour Sandwich)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 8 பிரட்
  2. 100 கிராம் வெண்ணெய்
  3. தக்காளி ஜாம் செய்ய
  4. 4 தக்காளி
  5. 100 கிராம் சீனி
  6. 1/2டே ஸ்பூன் ஏலக்காய் தூள்
  7. உப்பு
  8. 1/2டே ஸ்பூன் நெய்
  9. புதினா சட்னி செய்ய
  10. 1/2 கப் தேங்காய்
  11. 1 கப் புதினா இலைகள்
  12. சின்ன துண்டு இஞ்சி
  13. 3 பல் பூண்டு
  14. சின்ன துண்டு புளி
  15. 2 பச்சை மிளகாய்
  16. உப்பு, தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தக்காளி வேக வைத்து தோல் உரித்து மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    கடாயில் தக்காளி விழுது சீனி,உப்பு சேர்த்து மீதமான தீயில் கிளறவும்.

  3. 3

    ஜாம் பதம் வந்ததும் ஏலக்காய் தூள்,நெய் சேர்த்து இறக்கி ஆற விடவும்.

  4. 4

    புதினா சட்னி செய்ய கொடுக்கபட்ட பொருள் அனைத்தையும் மிக்சியில் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.

  5. 5

    இப்போம் ஒரு பிரட் எடுத்து அதில் புதினா சட்னி தடவவும்.அதின் மேல் அடுத்த பிரட் வைத்து பட்டர் தடவவும்.

  6. 6

    மறுபடியும் ஒரு பிரட் வைத்து தக்காளி ஜாம் தடவி மேலே ஒரு பிரட் வைக்கவும்.

  7. 7

    பின் ரெண்டாக வெட்டி பரிமாறவும்.சுவையான ஸ்வீட் அன்ட் ஸ்பைசி ட்ரை கலர் சாண்ட்விச் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes