சாக்லேட் பணியாரம்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#tv பாபா பாஸ்கர் ஓரியோ பிஸ்கட் வைத்து செய்தார் நான் போர்பன் பிஸ்கட் வைத்து சாக்லேட் பணியாரம் செய்தேன்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 3போர்பன் பிஸ்கட் பாக்கெட்
  2. 100ml பால்
  3. 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  4. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  5. 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  6. 1 டெய்ரி மில்க் சாக்லேட்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    போர்பன் பிஸ்கட் பிரித்து அதில் இருக்கும் கிரீமை தனியே எடுத்து பிஸ்கட் மட்டும் மிக்ஸியில் அடித்து பொடித்துக் கொள்ளவும். இதனுடன் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளவும். இட்லி மாவு பதத்திற்கு தேவையான அளவு பால் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    உள்ளிருக்கும் க்ரீம் உடன் ஒரு சிறிய டைரி மில்க் சாக்லெட்டை சேர்த்துஉருண்டைகளாக சாக்லேட் உருண்டைகள் செய்யவும்.

  3. 3

    ஒரு பணியாரக் கல்லில் நெய் ஊற்றி பிஸ்கட் கலவையை சிறிது சேர்த்து சாக்லேட் உருண்டை சேர்த்து மேலே திரும்பவும் பிஸ்கட் கலவையை சேர்க்கவும். 5 முதல் 10 நிமிடம் கழித்து பணியாரம் திருப்புவது போல் திருப்பிப் எடுக்கலாம்.

  4. 4

    சாக்லேட் பணியாரம் சாக்லேட் கேக் போல உள்ளிருக்கும் சாக்லேட் உருண்டைகள் உருகி சாக்லேட் லாவா போல இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes

More Recommended Recipes