காலிஃப்ளவர் குழம்பு (Cauliflower kulambu)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை பூக்களை பிரித்து சூடான தண்ணீரில் உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 2
சாம்பார் வெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். - 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வற்றல் மிளகாய், தனியா,சீரகம்,கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 4
பின்னர் நறுக்கிய வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
வறுத்த பொருட்கள் எல்லாம் சூடாரியவுடன் எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, தேங்காய் துருவல், மஞ்சள் தூள், உப்பு,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 6
ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 7
பின்னர் மிக்ஸி ஜாரில் உள்ள அரைத்த மசாலாவை சேர்க்கவும்.அதில் வேகவைத்து எடுத்த காலிஃப்ளவரை சேர்த்து,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும்.
- 8
குழம்பு நன்கு கொதித்து கொஞ்சம் கெட்டியாக மாறும்.அப்போது இறக்கினால் சுவையான காலிஃப்ளவர் குழம்பு தயார்.
- 9
இந்த குழம்பு சாதம், இட்லி,தோசை போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- 10
எடுத்து பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.மதிய உணவான சாதத்திற்கு இந்த காலிஃப்ளவர் குழம்பு மிகமிக சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
காலிஃப்ளவர் மசாலா குழம்பு (Cauliflower masala kulambu recipe in tamil)
# GA4 week24 #cauliflower இந்தக் குழம்பை சப்பாத்தி, சாதம் ,ஃப்ரைட் ரைஸ், புலாவ் ,பூரி போன்ற எல்லா உணவுடன் பரிமாறலாம். Manickavalli M -
சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய் சாதம்
#momஇந்த சிவப்பு கவுணி அரிசி மிகவும் சத்துக்கள் நிறைந்தது. கருவுற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் உகர்ந்த உணவு. வேக கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். நன்கு ஊற வைத்து வேகவைக்க வேண்டும். Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
கீரை கடையல் (Green leaves kadaiyal)
நிறைய விதத்தில் கீரைகள் கிடைக்கும்.நான் வீட்டில் இருந்து எடுத்த இரண்டு விதமான கீரைகளை வைத்து இந்த கீரை கடையல் செய்துள்ளேன். எல்லா வகையான கீரைகளிலும் இதே போல் செய்யலாம்.#Everday2 Renukabala -
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
டேஸ்ட் சூப்பரா இருக்கும் #GA4#week10#Cauliflower mutharsha s -
காலிஃப்ளவர் தவல அடை (Cauliflower thavala adai recipe in tamil)
இது என் ரெஸிபி; பாரம்பரிய ரெஸிபி இல்லை. அம்மா தவல அடை தவலையில் செய்வார்கள், என்னிடம் தவலை இல்லை. Cast iron skillet தான் இருக்கிறது. அடையில் காலிஃப்ளவர் சேர்த்தேன். #arusuvai5 Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் மிளகு வருவல்
#pepperபொதுவாக காலிஃப்ளவர் 65 அனைவருக்கும் பிடித்தது.குழந்தைகள் விரும்பி உண்பர். அதேபோல் இந்த மிளகு வறுவலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
உருண்டை மோர்க்குழம்பு (Urundai morkulambu recipe in tamil)
கோடை காலங்களில் குளிர்ச்சி தேவைப்படும் நேரங்களில் ,மோர் /தயிர் சேர்த்து சமைப்போம் . எங்கள் வீட்டில் அடிக்கடி மோர்க்குழம்பு செய்வோம். இதில் உருண்டை மோர்க்குழம்பு மிகவும் எளிது. #GA4#week7#buttermilk Santhi Murukan -
காளான் காரக்குழம்பு
காளான் குழம்பு நிறைய விதத்தில் செய்யலாம்.நான் காரக்குழம்பு செய்துள்ளேன். சத்துக்கள் நிறைந்த இந்த காளான் குழம்பு மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)
#jan1 இது கடலைப்பருப்பு வைத்து செய்வாங்க... நான் துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன்... Muniswari G -
-
-
-
பிஸிபேளாபாத். #kids3#lunchboxrecipes
குழந்தைகளுக்கு சாம்பார் சாதத்தை விட, பிஸிபேளாபாத்தில் எல்லா காய்கறிகளையும் சேர்த்து செய்து கொடுத்தால் சீக்கிரம் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Murukan
More Recipes
கமெண்ட்