சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவர் ஐ சுத்தம் செய்து சின்ன சின்ன பூக்களாக நறுக்கி கொதிக்கும் நீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து காலிஃப்ளவர் ஐ போட்டு ஐந்து நிமிடம் கழித்து இரண்டு முறை அலசி எடுக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 3
பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
பின் நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
பின் சுத்தம் செய்து வைத்துள்ள காலிஃப்ளவர் ஐ போட்டு சாம்பார் பொடி சிறிது உப்பு சேர்த்து கிளறி மெல்லிய தீயில் பத்து நிமிடங்கள் வரை மூடி வைக்கவும் அவ்வப்போது திறந்து கிளறி விடவும்
- 6
காலிஃப்ளவர் மசாலா உடன் சேர்ந்து வெந்து வந்ததும் தேங்காய் துருவல் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 7
சுவையான காலிஃப்ளவர் பொரியல் ரெடி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12471551















கமெண்ட்