வெஜ் புலாவ்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

வெஜ் புலாவ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் அரிசி
  2. 1 கேரட்
  3. 10 பீன்ஸ்
  4. 1 பெரிய வெங்காயம்
  5. 1 தக்காளி
  6. 1/2 கப் பட்டாணி
  7. 1 பச்சை மிளகாய்
  8. 2 ஸ்பூன் தயிர்
  9. 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  10. 1 பட்டை
  11. 2 கிராம்பு
  12. 2 ஏலக்காய்
  13. 1பிரியாணி இலை
  14. 1 ஸ்பூன் சோம்பு
  15. 1 ஸ்பூன் வத்தல் தூள்
  16. 1 ஸ்பூன் மல்லி தூள்
  17. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  18. தேவைக்கு உப்பு
  19. தேவைக்கு தண்ணீர்
  20. சிறிதளவுவெண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான காய்களை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

  2. 2

    ஒரு குக்கரில் சிறிதளவு வெண்ணை சேர்க்க வேண்டும் பின்பு அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை நட்சத்திர சோம்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும் பின்பு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்பு அதில் தக்காளியை சேர்த்து வதக்கவேண்டும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    இப்போது அது அதோட ஒரு ஸ்பூன் வத்தல் தூள் மல்லித் தூள் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும் சிறிதளவு தயிர் சேர்த்துக் கொள்ளவும் பின்பு நன்றாக வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.

  4. 4

    இப்பொழுது நறுக்கி வைத்திருக்கும் காய்கறி வேகவைத்த வைத்திருக்கும் பட்டாணி மற்றும் ஊற வைத்திருக்கும் அரிசியை புதினா மல்லி தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்

  5. 5

    3 விசில் வரும் வரை வேக விடவும்.

  6. 6

    சுவையான வெஜ் புலாவ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes