சுட்ட கத்திரிக்காய் மசியல் (Sutta Kathrikai masiyal Recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2 பெரிய கத்தரிக்காய்
  2. 4பல் பூண்டு
  3. 2 பச்சை மிளகாய்
  4. 2 பெரிய வெங்காயம்
  5. 1 தக்காளி
  6. 1ஸ்பூன் சீரகம்
  7. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  10. 2ஸ்பூன் மல்லி தூள்
  11. 1ஸ்பூன் கரமசாலா
  12. சிறிதளவுகொத்தமல்லி
  13. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    கத்தரிக்காய் கழுவி சுத்தம் செய்து எடுத்து அதன் நடுவில் மூன்று பக்கங்களிலும் கீறி விட்டு இடையில் பூண்டு பல், பச்சை மிளகாய் வைத்து மூடி கொள்ளவும்.

  2. 2

    பிறகு அடுப்பில் தீயில் வைத்து சுட்டு எடுக்கவும்.எல்லா பக்கங்களிலும் திருப்பி சுட்டு எடுக்கவும்.

  3. 3

    சூடு தணிந்த பின்னர் அதன் மேல் தோலை உரித்து அதன் காம்பு பகுதியை கட் செய்து எடுத்து கொள்ளவும். இதை ஒரு போர்க் வைத்து குத்தி மசித்து வைக்கவும்.

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து வெங்காயம் சிறிதாக நறுக்கி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

  5. 5

    இதில் மிளகாய் தூள், மல்லி தூள்,கரமசாலா, சீரகத்தூள் சேர்த்து கலந்து விட்டு மசித்த கத்தரிக்காய் இதில் சேர்த்து கலந்து விடவும்.

  6. 6

    எல்லா ஒன்று சேர்ந்து மசாலா பச்சை வாசனை போக கலந்து விடவும்.உப்பு காரம் சரிபார்த்து கொள்ளவும். கடைசியில் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும். சுட்ட கத்திரிக்காய் மசியல் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes