டயட் கோதுமை ரவை உப்புமா

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#everyday3
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.வயதானவர்களுக்கும்,உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற டயட் உப்புமா.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. 1 தம்ளர் கோதுமை ரவை
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 2 பச்சை மிளகாய்
  4. 2 வர மிளகாய்
  5. 2டீ ஸ்பூன் எண்ணெய்
  6. 1 ஸ்பூன் கடுகு
  7. 1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  8. 1/2 ஸ்பூன் கடலைப்பருப்பு
  9. கருவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிதளவு
  10. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் அதில் கடுகு போட்டு பொரிய விடவும். பின்பு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும். அதன் பிறகு பெரிய வெங்காயம் வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

  2. 2

    வெங்காயம் வதங்கிய உடன் அதில் ஒரு டம்ளர் கோதுமை ரவைக்கு இரண்டரை டம்ளர் தண்ணீர் எடுத்து சேர்த்துக் கொள்ளவும். உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். கருவேப்பிலை கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் கொதி வந்தவுடன் கோதுமை ரவையை தூவி கட்டியில்லாமல் கிளறி விடவும்.

  3. 3

    பிறகு வாணலியை மூடி வைத்து 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை கோதுமை ரவையை வேகவிடவும். பின்பு மூடியைத் திறந்து கரண்டி கொண்டு நன்கு ஒரு முறை கிளறி விடவும். சுவையான, சத்தான, எளிதான, எண்ணெய் அதிகம் இல்லாத கோதுமை ரவை உப்புமா தயார். உடல் நலம் குன்றியவர்கள் மற்றும் எடை குறைக்க நினைப்பவர்களுக்கும் இதை செய்து கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes