இரவு உணவு "மைதா அடை தோசை & தக்காளி பூண்டு காரச் சட்னி"#Everyday3

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

இரவு உணவு "மைதா அடை தோசை & தக்காளி பூண்டு காரச் சட்னி"#Everyday3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. மைதா அடை தோசைக்கு தேவையான பொருட்கள்:
  2. மைதா மாவு-500கிராம்
  3. மீடியம் அளவு பல்லாரி வெங்காயம்-2(ஆனியன் பேஸ்ட்)
  4. முட்டை-2
  5. உப்பு தூள்-தேவையான அளவு
  6. பாமாயில்-தேவையான அளவு(ஏதேனும் எண்ணெய்)தோசைக் கல்லில் தடவ
  7. தண்ணீர்-தேவையான அளவு(மாவு கரைக்க)
  8. கொத்தமல்லித்தள-கொஞ்சம்
  9. பச்சை மிளகாய்-2
  10. தேங்காய்-1மூடி(கெட்டியாக 1டம்ளர் தேங்காய்ப் பால்)
  11. தக்காளி பூண்டு காரச் சட்னிக்கு தேவையான பொருட்கள்:
  12. தக்காளி பழம்-8
  13. மீடியம் அளவு பல்லாரி வெங்காயம்-2
  14. முழு பூண்டு-2
  15. காஸ்மீர் மிளகாய்-10
  16. உப்பு தூள்-தேவையான அளவு
  17. நல்லெண்ணெய்-தேவையான அளவு
  18. கருவேப்பிலை-கொஞ்சம்
  19. கொத்தமல்லித்தள-கொஞ்சம்
  20. தாளிப்புக்கு தேவையானவை:
  21. நல்லெண்ணெய்-3டீஸ்பூன்
  22. கடுகு-1/4டீஸ்பூன்
  23. கருவேப்பிலை-கொஞ்சம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மைதா அடை தோசைக்கு தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளுங்கள்.
    2மீடியம் அளவு பல்லாரி வெங்காயத்தை நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள்.

    2பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

  2. 2

    1மூடி தேங்காயை நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு வெண்ணையாக அரைத்து அதில் கெட்டியாக 1டம்ளர் தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.

  3. 3

    1/2கிலோ மைதா மாவில் தேவையான அளவு உப்பு தூள் போட்டு தண்ணீர் சேர்த்து மீடியமான பதத்தில் கரைக்கவும்.வெங்காயம் பேஸ்ட்,நறுக்கிய பச்சை மிளகாய்,2முட்டை,கொத்தமல்லித்தள போடவும்.1டம்ளர் தேங்காய்ப் பால்-ஐ கரைத்த மைதா மாவில் ஊற்றி கலக்கவும்.2மணி நேரம் கரைத்து வைத்த மாவை ஊற வைக்கவும்.

  4. 4

    தக்காளி பூண்டு காரச் சட்னிக்கு தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளுங்கள்.
    வாணலியில் தேவையான அளவு பாமாயில் ஊற்றி 2முழு பூண்டு உறித்ததை பொன் நிறமாக வறுத்து எடுக்கவும்.

  5. 5

    பின் நறுக்கி வைத்த 2வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக வறுக்கவும்.பின் கொத்தமல்லித்தள,கருவேப்பிலை கொஞ்சம் போட்டு வதக்கவும்.
    10காஸ்மீர் மிளகாயை லேசாக வறுக்கவும்.

  6. 6

    8தக்காளியை வாணலியில் மிதமான தீயில் வைத்து வதக்கிக் கொள்ளவும்.
    வறுத்து வைத்த அனைத்தையும் சூடு ஆறிய பின் மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்(தண்ணீர் சேர்க்கக் கூடாது).

  7. 7

    ஒரு வாணலியில் 4டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி.எண்ணெய் சூடான பிறகு 1/4டீஸ்பூன் கடுகு,கொஞ்சம் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.பின் அரைத்து வைத்த தக்காளி பூண்டு காரச் சட்னியை தாளிப்போடு சேர்த்து தேவையான அளவு உப்பு தூள்,தண்ணீர் சேர்த்து 5நிமிடம் கொதிக்கவிடவும்.

  8. 8

    தோசைக்கல்லில் தேவையான அளவு எண்ணெய் தடவி.கல் சூடான பிறகு கரைத்து ஊற வைத்த மைதா மாவை தேவையான அளவு ஆப்பை கரண்டியில் ஊற்றி லேசாக தேய்க்கவும்.ஒரு பக்கம் வெந்த பிறகு திருப்பிப் போட்டு மறு பக்கம் வெந்த பிறகு எடுக்கவும்.

  9. 9

    மைதா அடை தோசை & தக்காளி பூண்டு காரச் சட்னி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
அன்று

Similar Recipes