உருளைக்கிழங்கு மசாலா

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664

#combo1 பூரி நலே உருளைக்கிழங்கு மசாலா தான் ஒரு சிறந்த காம்பினேஷன், இந்த உருளைக்கிழங்கு மசாலா கூட ஒரு கேரட் துருவி செஞ்சி பாருங்க ரொம்ப சுவையா இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 4வேக வைத்த உருளைக்கிழங்கு
  2. 1 துருவிய கேரட்
  3. 2நறுக்கிய வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. 4 பச்சை மிளகாய்
  6. 4 பல் பூண்டு
  7. 1 இன்ச் நறுக்கிய இஞ்சி
  8. சிறிதளவுகறிவேப்பிலை
  9. சிறிதளவுகொத்தமல்லி
  10. 1/2 மேஜை கரண்டி மஞ்சள்
  11. 1/2 மேஜை கரண்டி கடுகு
  12. 1/2 மேஜை கரண்டி ஜீரகம்
  13. என்னை தாளிப்பதற்கு தேவையான அளவு
  14. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவேண்டும், பின் வெங்காயம்,தக்காளி மற்றும் கேரட் நன்றாக சுத்தம் செய்து நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

  2. 2

    பின் ஒரு அகலமான வாணலியை வைத்து அதில் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து நன்கு பொரிந்தவுடன் வேப்பிலை வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும், வெங்காயம் வதங்கியவுடன் பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும், பின் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்

  3. 3

    தக்காளி நன்றாக வதங்கியதும் கேரட் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும், வேகவைத்த உருளைக்கிழங்கை சிறிதளவு மசித்துக் கொண்டு துக்கம் தன் கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்கு கிளற வேண்டும்

  4. 4

    2 லிருந்து 3 நிமிடங்கள் நன்கு கிளற வேண்டும், பின் கொத்தமல்லி தூவி முடிக்க வேண்டும்

  5. 5

    சுவையான பூரிக்கு ஏற்ற உருளைக்கிழங்கு மசாலா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

Similar Recipes