"பூரி" & "உருளைக்கிழங்கு மசாலா"...#Combo1

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

#Combo1...
#பூரி & உருளைக்கிழங்கு மசாலா...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்.
15.
  1. பூரி செய்ய தேவையான பொருட்கள்:
  2. கோதுமை மாவு-1கிலோ
  3. நல்லெண்ணெய்-3டீஸ்பூன் (தேவைக்கேற்ப சேர்க்கவும்)
  4. உப்பு கள்-தேவையான அளவு
  5. தண்ணீர்-தேவையான அளவு
  6. ரவா -3டீஸ்பூன்
  7. பச்சை அரிசி மாவு-3டீஸ்பூன்
  8. உருளைக்கிழங்கு மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
  9. உருளைக்கிழங்கு-1கிலோ
  10. நல்லெண்ணெய்-4டீஸ்பூன் (தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்)
  11. மீடியம் அளவு பல்லாரி வெங்காயம்-1/2கிலோ
  12. பொட்டுக்கடலை-100கிராம்
  13. கடுகு-1/2டீஸ்பூன்
  14. இஞ்சி பூண்டு விழுது-1டீஸ்பூன்
  15. வெள்ளை உளுந்து-1டீஸ்பூன்
  16. கடலைப் பருப்பு-1டீஸ்பூன்
  17. பெருஞ்சீரகம்-1டீஸ்பூன்
  18. காய்ந்த உருண்டை சிவப்பு மிளகாய்-3
  19. கருவேப்பிலை-3கொத்து
  20. மஞ்சள் தூள்-1டீஸ்பூன்
  21. மிளகாய் தூள்-1டீஸ்பூன்
  22. உப்பு தூள்-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்.
  1. 1

    ஒரு பவுளில் 1கிலோ கோதுமை மாவு,3டீஸ்பூன் அரிசி மாவு,3டீஸ்பூன் ரவா,3டீஸ்பூன் நல்லெண்ணெய்(ஏதேனும் எண்ணெய்),தேவையான அளவு உப்பு தூள் & கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி பிசைந்து கொள்ள வேண்டும்.

    முக்கியமான குறிப்பு:
    கோதுமை மாவு பிசைந்து 1/2 மணி நேரம் கழித்து பூரி செய்ய ஆரம்பிக்கவும்.
    அப்போது தான் பூரி மிருதுவாகவும்,உப்பலாகவும் இருக்கும்.

    பிசைந்த கோதுமை மாவில் சிறிய சிறிய உருண்டையாக எடுத்து (தேவைக்கேற்ப எண்ணெய் அல்லது கோதுமை மாவு தூவி) பூரி சீட் செய்ய தேய்த்துக் கொள்ளவும்.

  2. 2

    பூரி சீட் செய்ய தேய்த்துக் கொண்ட பிறகு உங்களுக்கு எந்த வடிவத்தில் வேண்டும் என்றாலும் அச்சு வைத்துக் கொள்ளலாம்.
    நான் உருண்டை வடிவத்தில் அச்சு வைத்துக் கொண்டேன்.

  3. 3

    ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி.எண்ணெய் காய்ந்த பிறகு செய்து வைத்த பூரி சீட்டை ஒவ்வொன்றாக போட்டு பொறித்து எடுக்கவும்.

    "சுவை மணம் கொண்ட மிருதுவாகவும் மற்றும் உப்பலான பூரி"தயார்

  4. 4

    உருளைக்கிழங்கு வேக வைக்கும் செய்முறை:

    1கிலோ உருளைக்கிழங்கை நன்றாக கழுவி இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

    பிரஸ்ஸர் குக்கரில் உருளைக்கிழங்கு மூழ்கிர அளவுக்கு தண்ணீர் சேர்த்து,தேவையான அளவு உப்பு கல் சேர்த்து கலக்கி.மூடியில் டயர் & வெயிட் போட்டு மூடி வைத்து 3விசில் விடவும்.

  5. 5

    பூரி உருளைக் கிழங்கு மசாலா செய்முறை:

    வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக அரிந்துக் கொள்ள வேண்டும்.

    1/2கிலோ பல்லாரி வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
    1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது.

    1டீஸ்பூன் மஞ்சள் தூள்,1டீஸ்பூன் மிளகாய் தூள்,100கிராம் பொட்டுக்கடலை,தேவையான அளவு தண்ணீர் & உப்பு தூள்.

    தாளிப்புக்கு தேவையான பொருட்கள்:

    1/2டீஸ்பூன் கடுகு,1டீஸ்பூன் வெள்ளை உளுந்து,1டீஸ்பூன் கடலைப் பருப்பு,1டீஸ்பூன் பெருஞ்சீரகம்,3கொத்து கருவேப்பிலை,3காய்ந்த சிவப்பு மிளகாய்.

  6. 6

    100கிராம் பொட்டுக்கடலையை லேசாக வெறும் பாத்திரத்தில் போட்டு வறுக்கவும்.

    சூடு ஆறிய பின் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக்கவும்.

  7. 7

    அடுத்து பொட்டுக்கடலை பொடியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் 4டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து 1/2டீஸ்பூன் கடுகு,1டீஸ்பூன் வெள்ளை உளுந்து,1டீஸ்பூன் கடலைப் பருப்பு,1டீஸ்பூன் பெருஞ்சீரகம்,3காய்ந்த உருண்டை சிவப்பு மிளகாய்,3கொத்து கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.

  8. 8

    அடுத்து 1/2கிலோ பல்லாரி வெங்காயத்தை நீளமாக நறுக்கியதை போட்டு பொன் நிறமாக வதக்கவும்.

    1டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,தேவையான அளவு உப்பு தூள் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

    1டீஸ்பூன் மஞ்சள் தூள்&1டீஸ்பூன் மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.

    தண்ணீர் சேர்த்து அரைத்த பொட்டுக்கடலை பேஸ்ட்டை மசாலா கலவையில் ஊற்றவும்.

  9. 9

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து.பின் நறுக்கி வைத்த உருளைக் கிழங்கை மசாலா கலவையில் போட்டு கிளறவும்.

  10. 10

    அடுத்து குறைந்த தீயில் 10நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.இடை இடையில் கிண்டவும் அப்போது தான் கிழங்கு கலவை அடியில் உட்காராமல் இருக்கும்...

    "உருளைக்கிழங்கு பூரி மசாலா"ரெடி

    நீங்களும் இதே போன்று செய்து சுவைத்துப் பாருங்கள்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
அன்று

Similar Recipes

More Recommended Recipes