எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 minutes
4 பரிமாறுவது
  1. ஒரு டம்ளர் பச்சரிசி(150gm)
  2. அரை டம்ளர் பாசிப்பருப்பு(75gm)
  3. 4 டேபிள் ஸ்பூன்தேங்காய்
  4. 4 டேபிள்ஸ்பூன்நெய்
  5. 250 கிராம்வெல்லம்
  6. 1 டேபிள்ஸ்பூன்முந்திரி திராட்சை
  7. ஏலக்காய் தூள்
  8. 50 mlபால்

சமையல் குறிப்புகள்

30 minutes
  1. 1

    பாசிப்பருப்பு மற்றும் பச்சரிசியை ஒரு 10 நிமிடம் ஊறவைக்கவும்.குக்கரில் அரிசி மற்றும் பாசிப்பருப்புடன் 4½ டம்ளர் தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்

  2. 2

    விசில் அடங்கியவுடன் அடுப்பை சிம்மில் வைத்து சாதத்தை கரண்டியால் மசித்துக் கொள்ளவும். இதனுடன் பால் சேர்த்து கிளறவும் அதனுடன் பொடித்த வெல்லத்தை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். (மணல் இருந்தால் வெல்லத்தை நன்றாகப் பொடித்து விட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளலாம்)

  3. 3

    முந்திரி திராட்சை ஏலக்காய் தேங்காய் துருவலை நெய் விட்டு வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்

  4. 4

    வெல்லம் கரைந்தவுடன் நெய்யில் வறுத்து வைத்த தேங்காய் துருவலை சேர்த்து கிளறவும். சர்க்கரை பொங்கல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes