திண்டுக்கல் தலப்பாக்கட்டி காளான்  பிரியாணி

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சீரக சம்பா அரிசி ஒரு டம்ளர்
  2. காளான் 200 கிராம்
  3. கேரட் ஒன்று
  4. பீன்ஸ் 10
  5. பெரிய வெங்காயம் 1
  6. ஒரு தக்காளி
  7. பச்சை மிளகாய் ஒன்று
  8. 1கைப்பிடி புதினா இலை
  9. பட்டை ஒரு அங்குலம்
  10. கிராம்பு-3
  11. ஏலக்காய் ஒன்று
  12. பிரிஞ்சி இலை ஒன்று
  13. நெய் 2 ஸ்பூன்
  14. எண்ணெய் 2 ஸ்பூன்
  15. உப்பு தேவையான அளவு
  16. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  17. தனியாத்தூள் ஒரு டீஸ்பூன்
  18. கரமசாலாத்தூள் அரை டீஸ்பூன்
  19. சோம்பு அரை டீஸ்பூன்
  20. தயிர் 2 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    காளான் கேரட் பீன்ஸ் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். புதினா, இஞ்சி பூண்டு பேஸ்ட் எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை மற்றும் தயாராக எடுத்துக் கொள்ளவும் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா தூள் இவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    இப்படி அடுப்பில் வைத்து இரண்டு முறை இந்த ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை புதினா இஞ்சி பூண்டு விழுது இவற்றை வதக்கவும்

  4. 4

    கேரட் பீன்ஸ் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இவற்றை வதக்கவும்

  5. 5

    காளான் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கரம் மசாலா தூள் மிளகாய்த் தூள் தனியா தூள், உயிர் இவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும். 5 நிமிடம் நன்கு வதக்கவும்

  6. 6

    பிறகு அரிசியை கழுவி அதனை சேர்க்கவும்பிறகு ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும்.

  7. 7

    நறுமணம் மிகுந்த சுவையான காளான் பிரியாணி தயார் தயிர் பச்சடியுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes