தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்(5 கபாப்)
  1. சிவப்பு கொண்டை கடலை 1/2 கப் (100 கிராம்)
  2. வெங்காயம் 1
  3. பச்சை மிளகாய் 1
  4. மல்லித்தழை சிறிதளவு
  5. புதினா இலை சிறிதளவு
  6. கடலை மாவு 3 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் 1 /4 தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி
  9. மல்லித்தூள் 1/2 தேக்கரண்டி
  10. சீரக தூள் 1 /2 தேக்கரண்டி
  11. கரம் மசாலா 1 /2 தேக்கரண்டி
  12. சாட் மசாலா 1/2 தேக்கரண்டி
  13. உப்பு தேவையான அளவு
  14. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடலையை 8 மணி நேரம் வரை ஊற வைத்து உப்பு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்

  2. 2

    தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்

  3. 3

    கடலையை ஆறவிட்டு மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும் (தண்ணீர் சேர்க்காமல்)

  4. 4

    இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் மல்லித்தழை புதினா இலை கடலை மாவு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லி தூள் சீரகத் தூள் கரம் மசாலா சாட் மசாலா உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    கடலை வேக வைத்த தண்ணீர் கொஞ்சம் சேர்த்து வடை போல் தட்டி ஓரங்களை சமம் செய்து கொள்ளவும் (தண்ணீர் அதிகம் சேர்த்தால் எண்ணெய் குடிக்கும்)

  6. 6

    மிதமான தீயில் வைத்து எண்ணெய்யில் இருபுறமும் பொறித்து எடுக்கவும்

  7. 7

    சுவையான வெஜ் ஷம்மி கபாப் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suku
Suku @sukucooks
அன்று

Similar Recipes