உருளைக்கிழங்கு அசைவக் குழம்பு (Potato gravy non veg style)

அசைவம் சாப்பிடாத நாட்களில் இந்த முறையில் உருளைக் கிழங்கை வைத்து ஒரு சுவையான உருளைக்கிழங்கு அசைவக்குழம்பு செய்து சுவைக்கலாம்.
#YP
உருளைக்கிழங்கு அசைவக் குழம்பு (Potato gravy non veg style)
அசைவம் சாப்பிடாத நாட்களில் இந்த முறையில் உருளைக் கிழங்கை வைத்து ஒரு சுவையான உருளைக்கிழங்கு அசைவக்குழம்பு செய்து சுவைக்கலாம்.
#YP
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து, பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- 2
வெங்காயம், சாம்பார் வெங்காயம், பூண்டு, இஞ்சி,மற்ற பொருட்களை வறுக்க கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் எடுத்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முதலில் தனியா, சீரகம்,சோம்பு,பட்டை,கசகசா,கிராம்பு, வற்றல்,நறுக்கிய சாம்பார் வெங்காயம்,பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
- 4
பின்னர் அதே வாணலியில் மசாலா பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
வறுத்த மசாலா சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு,தேங்காய் துண்டுகள் சேர்த்துவிட்டு சுற்று விட்டு,கொஞ்சமாக புளி,தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து தயாராக வைக்கவும்.
- 6
ஸ்டவ்வில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை வற்றல், நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்கு கலந்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
- 8
பின்னர் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால் உருளைக் கிழங்கு அசைவக்குழம்பு தயார்.
- 9
தயாரான குழம்பை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது அசைவக்குழம்பு முறையில் தயார் செய்த உருலலை கிழக்கு குழம்பு தயார்.
- 10
இதே முறையில் நாண் வெஜ் வைத்து குழம்பு செய்யலாம். இந்த உருளைக்கிழங்கு அசைவக்குழம்பு சாதம்,இட்லி, தோசை போன்ற எல்லா உணவுடனும் சேர்த்து சுவைத்திட மிக மிக சுவையாகவும், நல்ல மணத்துடனும் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)
பச்சை மொச்சை ஒரு சமயம் கிடைக்கும். அப்போது இந்த குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.#jan1 Renukabala -
கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) (Kathirikkaai gravy recipe in tamil)
மிகவும் சுவையான கத்தரிக்காய் வைத்து செய்த இந்த கிரேவியை சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala -
டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
இந்த தக்காளி குழம்பு கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.#vattaram Renukabala -
-
தேங்காய் முருங்கை மசாலா கிரேவி (Cocount drumstick masala gravy recipe in tamil)
முருங்கைக்காயுடன் மசாலா, தேங்காய் சேர்த்து வறுத்து அரைத்த ஒரு குழம்பு தான் இது. நல்ல சுவையும், நல்ல மணமும் கொண்டது.#Cocount Renukabala -
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
கேரட் சௌ சௌ மசாலா குழம்பு (carrot chow chow masala gravy)
கேரட், சௌ சௌ கலந்து செய்த இந்த மசாலா குழம்பு மிகவும் வித்தியாசமாக,ருசியாக இருந்தது.#magazine2 Renukabala -
உருளைக்கிழங்கு டபுள் பீன்ஸ் மசாலா குழம்பு (Potato double beans masala gravy)
இந்த குழம்பு ஊட்டி போன்ற மலை கிராம மக்களின் அன்றாட செய்து சுவைக்கப்படும் குழம்பு. மலை பிரதேச ஹோட்டல்களில் அங்கு விளையக்கூடிய உருளை்க்கிழங்கு டபுள் பீன்ஸ் வைத்து சமைக்கும் குழம்பு. ஒரு வித்தியாசமான மசாலா பொருட்களை சேர்த்து செய்யப்பட்டுள்ளது. எல்லா ஹோட்டல்களிலும் பரிமாறப்படுகிறது.#magazine3 Renukabala -
பச்சை ஆப்பிள் சட்னி (Green apple chutney) (Pachai apple chutney recipe in tamil)
பச்சை ஆப்பிள் சட்னி மிகவும் சத்துக்கள் நிறைந்தது மற்றும் சுவையானது. இந்த சட்னி எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
உருளைக்கிழங்கு கறிவேப்பிலை மசாலாவருவல்(Potato Curryleaves Roast recipe in tamil)
#GA4#ga4 #week1Potatoமிகவும் சுவையான இந்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து பாருங்கள். Kanaga Hema😊 -
-
உருளைக்கிழங்கு சாப்ஸ் குழம்பு (Urulai kilangu chops kulambu Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Malini Bhasker -
கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரதான உணவு புட்டு கடலை கறி. இங்கு சிகப்பரிசி புட்டு கடலை கறி செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
உருளைக்கிழங்கு வறுவல் (potato fry) 🥔
# pms family அற்புதமான சுவையான உருளைக்கிழங்கு வறுவல் செய்ய முதலில் கடாயில் சமையல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சோம்பு, கசகசா, இரண்டு பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு சிறிது, தேங்காய் துருவல் இதை அனைத்தையும் போட்டு எண்ணெயில் நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைக்கவும். பின் கடாயில் 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுடன் சேர்த்து வதக்கவும்.தேவைக்கேற்ப உப்பு,மஞ்சள்தூள் உருளைக்கிழங்கில் சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி விடவும். நன்கு வதங்கியதும் நமது சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல் தயார்👌👌👍👍 Bhanu Vasu -
கொள்ளுப்பொடி (Horse gram powder)
சத்துக்கள் நிறைந்த சுவையான, ஆரோக்கியமான கொள்ளை வைத்து ஒரு கொள்ளுப்பொடி செய்துள்ளேன். சுவையோ சுவை.அனைவரும் செய்து சுவைக்கவும்.#Powder Renukabala -
உருளைக்கிழங்கு ரைஸ். (Urulaikilanku rice recipe in tamil)
காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் பொடி செய்து வைத்துக் கொண்டால் , அவசர காலங்களில் மிக குறைந்த நேரத்தில் இந்த உணவு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். #kids3#lunchbox recipes Santhi Murukan -
பிரான் பிரியாணி (Prawn biryani recipe in tamil)
#photoஇந்த முறையில் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் பிரான் பிரியாணி Lakshmi -
-
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி(hotel style potato gravy recipe in tamil)
#made4 Gowri's kitchen -
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao
#Carrot#Bookதினமும் சாதம் சாம்பார் ரசம் என்று சமைத்து சாப்பிட்டு வர ,ஒரு மாற்றமாக இன்று செட்டிநாடு காய்கறி புலாவ் செய்தேன். செய்வது சுலபம் .இதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி சேர்த்து இருப்பதால் சத்துக்கள் நிறைந்த உணவு .😋😋 Shyamala Senthil -
More Recipes
கமெண்ட் (2)