தேங்காய் பால் குழம்பு🥥(coconut milk kulambum)🌿🍆🥔🥕🌶️🍀👌👌

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337

#pms family வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி கொண்ட அற்புதமான சுவையான தேங்காய் பால் குழம்பு செய்ய முதலில் அரை மூடி தேங்காயை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.பின் அரைத்த தேங்காயை நன்கு பிழிந்து தேங்காய் பால் கெட்டியாக எடுத்துக் கொள்ளவும்.பின் அரைத்த தேங்காயை மறுபடியும் தண்ணீரை ஊற்றி அரைத்து பிழிந்து தேங்காய் பால் எடுத்துக் வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் 2 ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு,சோம்பு, சீரகம் பிரியாணி இலை, ஏலக்காய் ஒன்று எண்ணெயில் போடவும்.பின் அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இப்பொழுது தண்ணீர் ஊற்றி இரண்டாவதாக அரைத்த எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை இதனுடன் ஊற்றி சேர்க்கவும். கடாயை மூடி போட்டு காய்களை வேக விடவும்.காய்கள் வெந்தவுடன் இதனுடன் முதலாவதாக அரைத்து வைத்த கெட்டியான தேங்காய் பாலை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும். கொத்தமல்லி கறிவேப்பிலை தூவி இறக்கவும்.நமது சுவையான தேங்காய்ப்பால் குழம்பு தயார்👌👌

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
3 பேர்
  1. 2 ஸ்பூன்சமையல் எண்ணெய் -
  2. 2 துண்டுகள்பட்டை, கிராம்பு, பிரியாணி இலை -
  3. 1ஏலக்காய் -
  4. 1 டீஸ்பூன்சோம்பு,சீரகம் -
  5. 5 பற்கள்வெள்ளைப் பூண்டு -
  6. 10 சிறியவெங்காயம் - பீஸ்
  7. 1பெரிய தக்காளி -
  8. 2உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் சிறியது -
  9. 1கேரட் , பீன்ஸ் - 2
  10. அரை மூடி தேங்காய்
  11. தேவையான அளவுஉப்பு
  12. 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் -
  13. தேவையான அளவுகறிவேப்பிலை
  14. 3பச்சை மிளகாய் -

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்களை நன்கு தண்ணீரில் கழுவி வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து முதலில் தண்ணீர் ஊற்றாமல் பிளிந்து கெட்டியாக தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்த தேங்காயை மறுபடியும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பிளிந்து தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.கெட்டி தேங்காய் பாலையும், இரண்டாவதாக அரைத்த தேங்காய்ப் பாலையும் தனித்தனிப் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    கடாயில் சமையல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை, சீரகம், ஏலக்காய்,அனைத்தையும்எண்ணையில் போடவும்.

  5. 5

    பின் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய்,பூண்டு பற்கள் ஆகிய இரண்டையும் ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வதக்கவும்.

  6. 6

    பின் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம் தக்காளி ஒவ்வொன்றாகப் போட்டு நன்கு வதக்கவும்.

  7. 7

    பின் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகிய காய்கறிகளை இதனுடன் சேர்க்கவும். கிளறி விட்டு பிறகு மஞ்சள்தூள், உப்பு தேவைக்கேற்ப சேர்த்து வதக்கவும்.

  8. 8

    அனைத்து காய்களையும் நன்கு வதக்கி விட்ட பிறகு இரண்டாவதாக தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை காய்களுடன் சேர்க்கவும்.

  9. 9

    தேங்காய் பாலை சேர்த்த உடன் மூடி போட்டு காய்களை வேக விடவும்.மூடியை நீக்கி காய்கள் வெந்தவுடன் முதலாவதாக அரைத்து எடுத்து வைத்துள்ள கெட்டி தேங்காய் பாலை ஊற்றவும்.

  10. 10

    கெட்டி பாலை சேர்த்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து ஒரு கொதி விடவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். கறிவேப்பிலை கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

  11. 11

    நமது சுவையான அற்புதமான தேங்காய் பால் குழம்பு தயார்👌👌 வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகிய புண்களை ஆற்றக் கூடிய சக்தி தேங்காய் பாலுக்கு உண்டு.வீட்டில் உள்ள அனைவருக்கும் மதிய உணவாக பரிமாறி மகிழுங்கள்👍👍 நன்றி😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337
அன்று

Similar Recipes