தேங்காய் பால் சாதம்/பிரியாணி(coconut milk biryani recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#CR
உடலுக்கு ஆரோக்கியமான, அத்தியாவசிமான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் பால் சாதம்,நல்ல வாசனையாக,காய்கறிகள் சேர்க்காமல் மிகவும் சுவையாக,சுலபமான செய்முறையாக இருக்கும்.

தேங்காய் பால் சாதம்/பிரியாணி(coconut milk biryani recipe in tamil)

#CR
உடலுக்கு ஆரோக்கியமான, அத்தியாவசிமான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் பால் சாதம்,நல்ல வாசனையாக,காய்கறிகள் சேர்க்காமல் மிகவும் சுவையாக,சுலபமான செய்முறையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
2பேர்
  1. 1கப் பாஸ்மதி அரிசி
  2. 1.5கப் தேங்காய் பால்
  3. 1பெரிய வெங்காயம்
  4. 1சிறிய தக்காளி
  5. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 2டேபிள்ஸ்பூன் மல்லிதழை தண்டுடன் நறுக்கியது
  7. 2டேபிள் ஸ்பூன் நறுக்கிய புதினா
  8. 3மிளகாய்
  9. 1/4டேபிள்ஸ்பூன் சோம்பு
  10. 1/4டேபிள் ஸ்பூன் மிளகு
  11. 5புதினா இலைகள்,கடைசியாக சேர்க்க
  12. தாளிக்க:
  13. 1ஸ்பூன் நெய்
  14. 2ஸ்பூன் கடலை எண்ணெய்
  15. 1பிரியாணி இலை
  16. 2கிராம்பு
  17. 1இன்ச் பட்டை
  18. 1ஏலக்காய்
  19. 1/2ஸ்பூன் கல்பாசி
  20. 1அண்ணாச்சி பூ

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
    அரிசியை நன்றாக கழுவி 45நிமிடங்களுக்கு ஊற விடவும்.

  2. 2

    அடி கனமான பாத்திரத்தில், நெய் மற்றும் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து,நறுக்கிய வெங்காயம்,மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    கண்ணாடி பதத்தில் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பின் நறுக்கிய மல்லி,புதினா சேர்த்து வதக்கவும்.
    மல்லி தண்டு நல்ல வாசனை கொடுக்கும்.

  4. 4

    பின் தேங்காய் பால் 1.5கப் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.இதனுடன் பெரிய துண்டுகளாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும். உப்பு சரி பார்க்கவும்.

  5. 5

    பின் அரிசி சேர்த்து கலந்து விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.

    (தம் போடாமல் குக்கரில் செய்ய,அரிசி கொதித்ததும் குக்கர் மூடி போட்டு,சிம்மில் வைத்து 1விசில் விட்டு எடுக்கவும்.)

  6. 6

    இனி தண்ணீர் வற்றி,தண்ணீர் மற்றும் அரிசி சமமாக வந்ததும்,சிறிய அடுப்பில் தோசைக் கல் வைத்து அதில் பாத்திரத்தை வைத்து,மேலே புதினா லேசாக தூவி மூடி போட்டு வெயிட் வைத்து 15 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும்.

  7. 7

    15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அனைத்து, 10நிமிடங்களே கழித்து பரிமாறலாம்.இது சாதம் அல்ல.தேங்காய் பால் பிரியாணியாக, வாசனையாக, சுவையாக இருக்கும்.

  8. 8

    அவ்வளவுதான். சுவையான தேங்காய் பால் சாதம்/பிரியாணி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes