தூத்துக்குடி மாக்ரூன்😋🤍😋🤍😋🤍😋

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#vattaram வாயில் வைத்ததும் கரையும் தூத்துக்குடி மக்ரூன்.

தூத்துக்குடி மாக்ரூன்😋🤍😋🤍😋🤍😋

#vattaram வாயில் வைத்ததும் கரையும் தூத்துக்குடி மக்ரூன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
6 நபர்கள்
  1. 1/2 கப் -முட்டையின் வெள்ளைக் கரு (4 முட்டை)
  2. 1/2 கப் -சர்க்கரை
  3. 1/2 கப் முந்திரி பருப்பு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு கண்ணாடி பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து பீட்டர் வைத்து அடிக்கவும். (பாத்திரத்தில் சிறிதளவும் தண்ணீர் இருக்க கூடாது)

  2. 2

    இதற்கிடையில் சர்க்கரையை கலவை இயந்திரத்தில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். பிறகு முந்திரி பருப்பு சேர்த்து சிறிது இடைவெளி விட்டு விட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.(தொடர்ந்து அரைத்தால் எண்ணெய் பிரிந்து வரும்)

  3. 3

    இரண்டு நிமிடங்கள் பீட் செய்ததும் பொடித்த சர்க்கரையை மூன்று பிரிவுகளாக இடைவெளிவிட்டு சேர்த்து பீட் செய்யவும்.

  4. 4

    ஸ்டிப் பிக் வரும் அளவிற்கு பீட் செய்ய வேண்டும். கரண்டியில் எடுத்தால் கீழே விழாத அளவிற்கு.

  5. 5

    பிறகு பொடித்த முந்திரி பருப்பை சேர்த்து பொறுமையாக கலக்கவேண்டும். இல்லையெனில் முட்டையில் இருக்கும் காற்றுக் குமிழ்கள் உடைந்துவிடும்.

  6. 6

    பிறகு கலந்த கலவை ஒரு பிளாஸ்டிக் கவரில் சேர்த்து, அடிபாகத்தில் சிறிது ஓட்டை செய்து கொள்ளவும்.

  7. 7

    தயார் செய்த மக்ரூன் களை 10 நிமிடம் முன்கூட்டியே சூடுபடுத்திய ஓவனில் ஒரு மணி நேரம் வேக வைக்கவும்.

  8. 8

    ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவனில் இருந்து உடனடியாக எடுத்து விடக்கூடாது. 15 நிமிடங்கள் அதிலேயே இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் வடிவம் கிடைக்கும்.

    அனைவரும் விரும்பி ருசித்து சாப்பிடும் சுவையான தூத்துக்குடி மக்ரூன் தயார்.😋😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes