😋😋இட்லி பொடி😋😋 Idly podi recipe in tamil

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#vattaram

எத்தனையோ வகை இட்லிப் பொடிகள் கடைகளில் கிடைத்தாலும்.

வீட்டில் நீண்ட நாட்கள் கெடாமல், வேதிப் பொருட்கள் சேர்க்காமல் செய்யப்படும் இட்லிப் பொடி தனிச்சுவையினையும், ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளது

😋😋இட்லி பொடி😋😋 Idly podi recipe in tamil

#vattaram

எத்தனையோ வகை இட்லிப் பொடிகள் கடைகளில் கிடைத்தாலும்.

வீட்டில் நீண்ட நாட்கள் கெடாமல், வேதிப் பொருட்கள் சேர்க்காமல் செய்யப்படும் இட்லிப் பொடி தனிச்சுவையினையும், ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 1/4 கப் - கடலை பருப்பு
  2. 1/4 கப் - பொட்டுக்கடலை
  3. 1/4 கப் -உளுத்தம்பருப்பு
  4. 6 - காய்ந்த மிளகாய்
  5. 1 கொத்து- கறிவேப்பிலை
  6. 1/4 தே.க - பெருங்காய தூள்
  7. 1/4 தே.க - சீரகம்
  8. 5 பல் - பூண்டு
  9. 1 தே.க - நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    இட்லி பொடியை அரைப்பதற்கு, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவும், வறுபடும் பக்குவமும் தான் மிகவும் முக்கியம். சேர்க்கப்படும் பொருட்களின் அளவு மாறினாலும், சிவக்கும் தன்மை மாறினாலும், பொடியின் ருசி பக்குவமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

  2. 2

    அடி கனமான வாணலியில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் பொட்டுக்கடலை இவற்றை தனித்தனியாக மிதமான தீயில் வைத்து (எண்ணெய் சேர்க்காமல்) சிவக்க வறுக்கவும்.

  3. 3

    பிறகு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்,(மணமாக இருக்கும்) சேர்த்து காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து வறுக்கவும்.

  4. 4

    நன்றாக வருபட்டதும் பெருங்காய தூள் சேர்த்து அடுப்பை அணைத்து கொள்ளவும்...

    பிறகு அணைத்து பொருட்களையும் தட்டு அல்லது அகண்ட பாத்திரத்தில் சேர்த்துக் ஆற வைக்கவும்.

  5. 5

    ஆறியதும் கலவை இயந்திரத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  6. 6

    சுவையான இட்லி பொடி தயார்.

  7. 7
  8. 8
  9. 9
எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes