உருளைக்கிழங்கு வறுவல்

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

இந்த வறுவல் தயிர், ரசம் சத்தத்துடன் ரொம்ப நன்றாக இருக்கும்.

சப்பாத்தி கூட இந்த வறுவல் ம‌ற்று‌ம் தயிர் சேர்த்து சாப்பிடலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 5உருளைக்கிழங்கு பெரியது -
  2. 6 தேக்கரண்டிகடலை எண்ணெய் -
  3. 1 தேக்கரண்டிகடலைப்பருப்பு-
  4. சிறிதளவுகறிவேப்பிலை
  5. 2 தேக்கரண்டி மல்லி தூள்-
  6. 1.5 தேக்கரண்டிசீரக தூள் -
  7. 1 தேக்கரண்டிமிளகு தூள் - (தேவைகேற்ப)
  8. 1 தேக்கரண்டி மிளகாய் தூள் -(தேவைகேற்ப)
  9. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி, தேவையான வடிவத்தில்(சிறு அல்லது நீள வாக்கில்)வெட்டவும்.

  2. 2

    வெட்டிய உருளைக்கிழங்கை தண்ணீரில் 20 நிமிடம் போட்டு,பின் வடிகட்டி கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு போட்டு,சிவந்ததும் உருளைக்கிழங்கை சேர்க்கவும். உப்பு சேர்த்து, மூடி வைத்து வேக வைக்கவும்

  4. 4

    10 நிமிடத்தில் வெந்துவிடும். தோசை கரண்டி வைத்து கிளறவும். இல்லையெனில் கிழக்கு மசித்து விடும்.

  5. 5

    இதில் மேற்கூறிய மசாலாவை சேர்க்கவும். சேர்த்து கிளறி,தீயை கூட்டி வைத்து கடாயை மூடி வைக்கவும்.மசாலா கிழங்கில் நன்றாக ஒட்ட ஆரம்பிக்கும்.உப்பு தேவைக்கு சேர்க்கவும்

  6. 6

    10 நிமிடங்கள் மூடி வைத்து அடிக்கடி கிளறி விடவும். கடைசியாக கறிவேப்பிலை கிள்ளி சேர்க்கவும்.

  7. 7

    எண்ணைய் குறைந்த அளவு சேர்த்தால் கிழங்கு மசிந்து விடும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes