ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கோபி மஞ்சூரியன்

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#combo5
#manchurian
#cookwithsugu
ரெஸ்டாரண்ட்டில் வினிகர் சேர்ப்பாங்க அதற்கு பதில் லெமன் ஜூஸ் சேர்த்து கோபி மஞ்சூரியன் செய்துள்ளேன்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 1காலிபிளவர்
  2. ஒரு ஸ்பூன் மைதா மாவு
  3. ஒரு ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவு
  4. ஒரு ஸ்பூன் அரிசி மாவு
  5. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. தேவையான அளவு உப்பு
  8. தேவையான அளவுதண்ணீர்
  9. பொரிப்பதற்கு சமையல் எண்ணெய்
  10. மஞ்சூரியன் செய்ய
  11. 1 பெரிய வெங்காயம்
  12. பாதி குடைமிளகாய்
  13. 6பல் பூண்டு
  14. ஒரு ஸ்பூன் சோயா சாஸ்
  15. ஒரு ஸ்பூன் டொமேட்டோ கெட்சப்
  16. ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ்
  17. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  18. அரை ஸ்பூன் உப்பு
  19. ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவு
  20. அரை டம்ளர் தண்ணீர்
  21. ரெண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய்
  22. 1 கொத்து கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்து காலிஃப்ளவரை போட்டு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி தண்ணீரை வடித்து வைக்கவும்

  2. 2

    மைதா மாவு கார்ன் ஃப்ளார் மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து காலிபிளவர் உடன் நன்கு பிசறி 5 நிமிடம் ஊற வைக்கவும்

  3. 3

    அடுப்பில் எண்ணெயை காய வைத்து எண்ணை காய்ந்ததும் ஊறவைத்த காலிஃப்ளவர் கலவையை போட்டு பொரித்தெடுத்து வைக்கவும்

  4. 4

    வெங்காயம் பூண்டு குடைமிளகாய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும் அடுப்பில் கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பூண்டைப் போட்டு வதக்கவும்

  5. 5

    குடமிளகாய் சேர்த்து வதக்கவும்

  6. 6

    டொமேட்டோ கெட்சப் சோயா சாஸ் மிளகாய்த்தூள் லெமன் ஜூஸ் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

  7. 7

    ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் மாவை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி விடவும்

  8. 8

    கலவை கெட்டியானதும் பொரித்து வைத்துள்ள காலிபிளவரை போட்டு நன்றாக கிளறி விட்டு கிரேவியில் காலிபிளவர் அரை நிமிடம் ஊறவேண்டும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் கோபி மஞ்சூரியன் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes