கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன்.

கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)

எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 நபர்கள்
  1. 1பெரிய காலிஃப்ளவர் கட் செய்தது
  2. 1/4 கப் கார்ன்ஃப்ளார்
  3. 2டேபிள் ஸ்பூன் மைதா
  4. தேவையானஅளவு உப்பு
  5. 1டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  6. தேவையான அளவு பொரிக்கத்எண்ணெய்
  7. 2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த பூண்டு
  8. 1டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த இஞ்சி
  9. 2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த வெங்காயம்
  10. 1டீஸ்பூன் சோயா சாஸ்
  11. 1டேபிள் ஸ்பூன் ரெட் சில்லி சாஸ்
  12. 2டேபிள் ஸ்பூன் டொமேட்டோ கெட்சப்
  13. 1டேபிள் ஸ்பூன் கார்ன் ஃப்ளார்
  14. 1டீஸ்பூன் மிளகு தூள்
  15. 4டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
  16. 1/2 டீஸ்பூன் ஒயிட் வினிகர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    காலிஃப்ளவரை கொதிக்கும் தண்ணீரில் உப்புடன் ஒரு கொதி விட்டு வடிகட்டி வைக்கவும்

  2. 2

    ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து வடித்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து நன்கு கலந்து அழுத்தி வைக்கவும். 1/2மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் காலிஃப்ளவரை சிறிது சிறிதாக பொரித்து எடுத்து வைக்கவும்.

  4. 4

    மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும், பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும், இதில் சோயா சாஸ், சில்லி சாஸ், 1/4 டீஸ்பூன் உப்பு, டொமேட்டோ கெட்சப் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    இதில் பொரித்த காலிஃப்ளவரை சேர்த்து வதக்கவும் இதில் 1/2 டீஸ்பூன் ஒயிட் வினிகர் சேர்த்து நன்கு வதக்கவும்.
    கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றி கிளறவும்.

  6. 6

    மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும். சுவையான கோபி மன்சூரியன் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes