டீ கடை பருப்பு மசால் வடை

#combo5
பருப்பு மசால் வடை என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... அதிலும் டீ கடைகளில் விற்கும் பருப்பு மசால் வடையின் சுவையோ தனி தான்... செய்வதும் மிகவும் சுலபம் ...சுவையோ மிகவும் அதிகம்... சுவையான காரசாரமான டீ கடை பருப்பு மசால் வடை செய்யலாம் வாங்க
டீ கடை பருப்பு மசால் வடை
#combo5
பருப்பு மசால் வடை என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... அதிலும் டீ கடைகளில் விற்கும் பருப்பு மசால் வடையின் சுவையோ தனி தான்... செய்வதும் மிகவும் சுலபம் ...சுவையோ மிகவும் அதிகம்... சுவையான காரசாரமான டீ கடை பருப்பு மசால் வடை செய்யலாம் வாங்க
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு டம்ளர் கடலைப் பருப்பை தண்ணீரில் அலசிவிட்டு பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து 5 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்
- 2
பருப்பு மசால் வடை செய்வதற்கு 10 பல் பூண்டை தோலுரித்து எடுத்துக்கொள்ள வேண்டும் அதனுடன் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் 3 பச்சை மிளகாய் மற்றும் இரண்டு சிறிய துண்டு பட்டை இவை எல்லாவற்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும்
- 3
அரைத்த விழுதுகள் உடன் நாம் ஊற வைத்துள்ள கடலைப் பருப்பையும் தண்ணீரை வடித்துவிட்டு வெறும் பருப்பை மட்டும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்
- 4
பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும் அதனுடன் ஒரு கையளவு கருவேப்பிலை மற்றும் ஒரு கையளவு கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும் அதனை நாம் அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 5
இப்போது எல்லாவற்றையும் நன்றாக பிசைந்து பிறகு மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பிறகு மறு கையில் வைத்து வடைக்கு ஏற்றவாறு வட்டமாய் தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்
- 6
அடுத்து ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானவுடன் நாம் தட்டி வைத்துள்ள வடை மாவு துண்டுகளை எடுத்து ஒவ்வொன்றாய் எண்ணெயில் சேர்க்க வேண்டும்
- 7
வடை ஒருபுறம் நன்றாக வெந்து சிவந்ததும் மறுபுறம் திருப்பிப் போட வேண்டும் இரண்டு புறமும் பொன்னிறமாக வரும்வரை வடைகளை எண்ணெயில் பொரிக்க வேண்டும்
- 8
வடை பொன்னிறமாய் இருபுறமும் வந்தவுடன் வடைகளை எண்ணெயில் இருந்து எடுத்து எண்ணெய் வடிகட்டியில் வைத்து சிறிது நேரம் எண்ணெயை வடிய விடவேண்டும்
- 9
அவ்வளவுதான் இதோ மிகவும் ருசியான காரசாரமான டீ கடை பருப்பு மசால் வடை தயார் பாயாசத்துடன் சேர்த்து சாப்பிட்டால் இது மிகவும் சூப்பர் காம்பினேஷன் ஆக இருக்கும் வாங்க சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டீக்கடை மசால் வடை
ஈவினிங் நேரத்தில், டீ கடைகளில் மசால் வடை மிகவும் எளிதாக கிடைக்கூடியது. இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். #Np3 Santhi Murukan -
மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி . Shyamala Senthil -
திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil
#magazine1...அட்டஹாசமான சுவையில், பருப்பு ஊறவைத்து அரைக்காமல் செய்த திடீர் மசால் வடை.. Nalini Shankar -
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா
#colours1சப்பாத்தி பூரி இவற்றிற்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் ருசியாகவும் இருக்கும் அதேசமயம் அதில் சத்தும் அதிகம் அதை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க Sowmya -
சேலம் ஸ்பெஷல் எம்டி சால்னா
#vattaramweek 6சேலத்தில் கிடைக்கும் உணவு வகைகளில் மிகவும் பிரபலமானதாக இருப்பது பரோட்டாவிற்கு காம்பினேஷன் ஆக தரும் எம்டி சால்னா தான்.... இதில் எந்த காய்கறிகளும் சேர்ப்பது இல்லை ஆனால் சுவையோ மிகவும் பிரமாதம்.. அசைவ குழம்புகளையும் மிஞ்சும் சுவை இதில் கிடைக்கும் ....அதுதான் இந்த எம்டி சால்னா வின் தனிசிறப்பு.... மிகவும் ருசியான ...சேலத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் எம்டி சால்னாவை சமைக்கலாம்..வாங்க... Sowmya -
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
இது தோசைக்கு பூரிக்கு மிகவும் அருமையாக இருக்கும் தோசை ஊற்றி மசாலா மேலே தடவி மசால் தோசை செய்து கொடுத்தீர்கள் என்றால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் Ananyaji -
-
மொறு மொறு உளுந்து வடை & இஞ்சி டீ
#combo5 உளுந்து வடை எல்லா வயதினருக்கும் ஏற்றது. உளுந்து,எலும்பு தேய்மானத்திற்கு நல்லது. Deiva Jegan -
சக்கரைவள்ளி கிழங்கு அடை
#cookerylifestyleகிழங்கு வகைகளில் மிகவும் சுவையான அதேசமயம் மிகவும் ஆரோக்கியமான கிழங்கு என்றால் அது சர்க்கரைவள்ளிக்கிழங்கு தான் சக்கரை வள்ளிக்கிழங்கு நம் இதயத்தை பாதுகாக்கவும் ரத்தத்தை சுத்திகரிக்கவும் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்கவும் நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது... Sowmya -
வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க
கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். ஒரு மிக்ஸியில் 6 பல் பூண்டு 4 பல் இஞ்சி காய்ந்த மிளகாய் 1 கருவேப்பிலை சிறிதளவு ஒரு மேசை கரண்டி சோம்பு சேர்த்து நர நர என்று அரைத்து கொள்ளவும் பிறகு அதில் ஒரு சிறிய துண்டு பட்டை மற்றும் ஊற வைத்த கடலை பருப்பை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும் பிறகு அந்த கலவையில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும் பிறகு மல்லி தழை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்த கலவையை உருண்டையாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மசால் வடை ரெடி..உண்டு மகிழுங்கள் Mohamed Aahil -
-
மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam Lakshmi Sridharan Ph D -
-
மதுரை பேமஸ் டீ கடை இனிப்பு அப்பம்
#vattaramWeek 5இனிப்பு பண்டங்கள் என்றாலே எல்லாருக்கும் விருப்பம் தான்... அதிலும் டீ கடைகளில் விற்கும் இனிப்பு அப்பம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... பொதுவாக மதுரையில் உள்ள எல்லா டீ கடைகளிலும் இந்த இனிப்பு அப்பம் இடம்பெற்றிருக்கும்.... மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மிருதுவான டீக்கடை இனிப்பு ஆப்பம் செய்து பார்க்கலாம் வாங்க... Sowmya -
-
உருளைக்கிழங்கு மசால் (Potato Masal recipe in Tamil)
#combo1* பூரி என்றாலே உருளைக்கிழங்கு மசால் தான் மிகவும் பொருத்தமான ஜோடி.* எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தாமான ஒன்று. kavi murali -
பருப்பு வடை, அப்பளம் (Dal vada, appalam) (Paruppu vadai appalam recipe in tamil)
அப்பளம் மற்றும் பருப்பு வடை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids1 #Snack Renukabala -
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
-
பக்கோடா (Pakoda recipe in tamil)
#GA4 மிகவும் சுவையான பகோடா இனிப்பு கடைகளில் கிடைப்பது போன்றே அதே சுவையில் வீட்டில் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்Durga
-
மசால் தோசை (Masal dosai recipe in tamil)
#familyமசால் தோசை எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும். வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. Soundari Rathinavel -
டீ கடை கஜடா / கேக் (Kajada cake recipe in tamil)
அனைத்து டீ கடைகளில் கிடைக்க கூடியது.இனி வீட்டிலேயே சுவையான டீ கடை கஜடா சுலபமாக செய்யலாம்#snacks#teashoprecipe#hotel#goldenapron3 Sharanya -
கீரை வடை(keerai vadai recipe in tamil)
#HJசுவைமிக்க ஆரோக்கியமான மொறு மொறு அரைகீரை வடை. Nalini Shankar -
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)
#pongalஇது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு பட்டாணி மசால் ஆகும். உங்களுக்கு செய்யப்பட்டு ஸ்பெஷல் ஃ டிஃபன். Meena Ramesh -
More Recipes
கமெண்ட்