தர்மபுரி மிளகாய் வடை

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664

#vattaram #week6 , தர்மபுரியில் ரொம்ப ஃபேமஸான ஒரு ஸ்ட்ரீட் புட்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2 கப் திணை அரிசி
  2. 1/2 கப் இடலி அரிசி
  3. 1/2 கப் துவரம் பருப்பு
  4. 10சின்ன வெங்காயம்
  5. 10வர மிளகாய்
  6. 1 இஞ்ச் இஞ்சி
  7. 4பூண்டு பல்
  8. 4கிராம்பு
  9. 1 இன்ச் பட்டை
  10. 1/2 தேக்கரண்டி சீரகம்
  11. 1தேக்கரண்டி
  12. சிறிதளவுநறுக்கிய கொத்தமல்லி
  13. இரண்டு கொத்து கறிவேப்பிலை
  14. தேவையானஅளவுவடை பொரிப்பதற்கு எண்ணெய்
  15. தேவையானஅளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் அரிசியையும் பருப்பையும் நன்கு அலசி இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    பின் ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், வரமிளகாய், பூண்டு, இஞ்சி, சீரகம், சோம்பு எல்லாவற்றையும் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும், என்பதே மிக்ஸி ஜாரில் அரிசியும் பருப்பையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    பின் அரைத்த மாவை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி சிறிதளவு தண்ணீர் கலந்து அதனுடன் கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு குழி கரண்டி அளவு மாவை எடுத்து அதில் ஊற்ற வேண்டும்

  5. 5

    தீயதை இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பிரித்தெடுக்க வேண்டும்

  6. 6

    சுவையான தர்மபுரி ஸ்பெஷல் மிளகாய் வடை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

Similar Recipes