தர்மபுரி மிளகாய் வடை

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

தர்மபுரி special
#vattram
#dharmapuri
#week6

தர்மபுரி மிளகாய் வடை

தர்மபுரி special
#vattram
#dharmapuri
#week6

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 கப் பச்சரிசி
  2. 1/2 கப் துவரம்பருப்பு
  3. 15 பல் சின்ன வெங்காயம்
  4. 10 பல் பூண்டு
  5. 1 inch இஞ்சி
  6. 6 வரமிளகாய்
  7. 2 பட்டை
  8. 5 கிராம்பு
  9. 1 ஸ்பூன் சோம்பு
  10. 2கெத்து கருவேப்பிள்ளை சிறிதளவு கொத்த மல்லி
  11. தேவைக்கேற்ப எண்ணெய், உப்பு

சமையல் குறிப்புகள்

2 நிமிடங்கள்
  1. 1

    தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பச்சரிசியும், துவரம்பருப்பும் எடுத்துக் கொண்டு கழுவிக் கொள்ளவும் சுத்தமானதும் அதை தண்ணீரில் ஊற வைக்கவும் சரியாக 1 மணி நேரம் விடவும் அதற்கு அதிகமானால் பொறிக்கும் போது எண்ணெய் அதிகமாக குடிக்கும்

  3. 3

    ஊறியதும் மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும் அதில் வெங்காயம், பூண்டுச் சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    பின் இஞ்சி, பட்டை, கிராம்புச் சேர்க்கவும்

  5. 5

    பிறகு வரமிளகாய், சோம்பு, கருவேப்பிள்ளைச் சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    பின் கடைசியாக உப்புச் சேர்த்து அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்

  7. 7

    அரைத்ததை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும் அதில் கொத்தமல்லித் தழைகளை போட்டு கலந்துக் கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொதிக்க விடவும்

  8. 8

    தோசை மாவுப்பதத்திற்கு இருக்க வேண்டும் அதனை கரண்டியின் உதவியால் எண்ணெயில் இடவும்

  9. 9

    இட்ட ஒரு நிமிடத்தில் திருப்பிப் போடவும் இருப்புறமும் வெந்ததும் பரிமாறவும் சுவையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes