வாழைப்பூ கூட்டு

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

#cookerylifestyle

வயிறு பிரச்சனைகளை சரி செய்ய வல்லது.

வாழைப்பூ கூட்டு

#cookerylifestyle

வயிறு பிரச்சனைகளை சரி செய்ய வல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 1வாழைப்பூ
  2. 100 கிராம் பாசிப்பருப்பு
  3. 3பெரிய வெங்காயம்
  4. 2 காய்ந்த மிளகாய்
  5. சிறிதளவு கருவேப்பிலை
  6. தாளிக்க
  7. அரை ஸ்பூன் கடுகு
  8. அரை ஸ்பூன் உளுந்து
  9. தேவையான அளவுஉப்பு
  10. ஒரு ஸ்பூன் சீரகத்தூள்
  11. தேவையான அளவு தண்ணீர்
  12. 5 ஸ்பூன் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    வாழைப்பூவில் நரம்பு எடுத்து சுத்தம் செய்யவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணி ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் போடவும்.

  2. 2

    இரண்டு ஸ்பூன் தயிர் ஊற்றி, வாழைப்பூவை பொடிப்பொடியாக நறுக்கி ஊறவைக்கவும். ஏன்னா அது கருக்காமல் இருக்கும். குக்கரில் பாசிப் பருப்பு போடவும்.

  3. 3

    பாசிப் பருப்பை நன்றாகக் கழுவி எடுத்துக்கொண்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றவும்.

  4. 4

    மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் பருப்பை குக்கரில் 2 விசில் வைத்து வேகவிடவும். கரண்டியால் பருப்பை மசித்து பொடியாக நறுக்கிய வாழைப்பூவை அதில் சேர்க்கவும்.

  5. 5

    உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தூள் போட்டு குக்கரில் ஒரு விசில் வைக்கவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும்.

  6. 6

    கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

  7. 7

    அதோடு வெங்காயம் சேர்த்து, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

  8. 8

    பின் வேக வைத்து இறக்கிய வாழைப்பூவை அதில் சேர்த்து கொதித்ததும் தேங்காய்ப்பூ தூவி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes