வாழைத்தண்டு பொரியல் (plantain pith poriyal)

Swarna Latha
Swarna Latha @latha

#வட்டாரம்
வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது . உடலில் உள்ள துர்நீரை அகற்றி சிறுநீரக கோளாறு வராமல் தடுக்க வல்லது. வாழைத்தண்டை வாரம் ஒருமுறை சேர்த்தல் உடல்நலத்திற்கு நல்லதாகும்.

வாழைத்தண்டு பொரியல் (plantain pith poriyal)

#வட்டாரம்
வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது . உடலில் உள்ள துர்நீரை அகற்றி சிறுநீரக கோளாறு வராமல் தடுக்க வல்லது. வாழைத்தண்டை வாரம் ஒருமுறை சேர்த்தல் உடல்நலத்திற்கு நல்லதாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 துண்டுவாழைத்தண்டு
  2. 3 ஸ்பூன்தேங்காய் துருவல்
  3. 2 ஸ்பூன்பாசிப்பருப்பு
  4. 2பச்சை மிளகாய்
  5. 1 ஸ்பூன்சீரகம்
  6. தேவையான அளவுஉப்பு
  7. 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்
  8. 1 ஸ்பூன்எண்ணெய்
  9. 1/2 ஸ்பூன்கடுகு
  10. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாசிப்பருப்பை கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். வாழைத்தண்டை நறுக்கி நார் நீக்கி மோர் கலந்த தண்ணீரில் போடவும்.

  2. 2

    மிக்ஸியில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து பாசிப்பருப்பு சேர்த்து வேக விடவும்.

  4. 4

    பாசிப்பருப்பு பாதியளவு வெந்ததும் நறுக்கி வைத்த வாழைத்தண்டை 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

  5. 5

    வாழைத்தண்டு வெந்ததும் அரைத்து வைத்த தேங்காய் கலவையை சேர்த்து 2 நிமிடம் மூடி வைத்து இறக்கவும். ஆரோக்கியமான வாழைத்தண்டு பொரியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Swarna Latha
அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

Similar Recipes