எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1 சுரைக்காய்
  2. 2 பெரியவெங்காயம்
  3. 5 பூண்டு பல்
  4. 1 ஸ்பூன் சாம்பார் தூள்
  5. 1/4 ஸ்பூன் கடுகு
  6. 1/4 ஸ்பூன் உளுந்தம்பருப்பு
  7. 4 ஸ்பூன் தேங்காய் துருவல்
  8. 2 ஸ்பூன் எண்ணெய்
  9. ஒரு கொத்து கறிவேப்பிலை
  10. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு,உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

  3. 3

    பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு 2 பூண்டுபல்களை தட்டி எண்ணெயில் போட்டு வதக்கவும். ஒரு ஸ்பூன் சாம்பார் தூள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

  4. 4

    பிறகு பொடியாக நறுக்கிய சுரைக்காய் அதில் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

  5. 5

    பிறகு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விடவும். தண்ணீர் சுண்டி சுரைக்காயை நன்கு வெந்தவுடன் தேங்காய் துருவலை போட்டு ஒரு நிமிடம் வதக்கி பிறகு பரிமாறவும்.

  6. 6

    சுவையான சுரைக்காய் பொரியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes